Tuesday, February 22, 2022

588.கனியினும்-இனித்த தேன்-மொழியே(மதுரையில் பறந்த மீன் கொடியை) **

கனியினும்-இனித்த தேன்-மொழியே இவர் பேசிடக்-கேட்டேனே
சாயி சமிதியில்-யாரும் குடும்பம்-போலே குலவிடக்-கண்டேனே

(Short Interlude)
கனியினும்-இனித்த தேன்-மொழியே இவர் பேசிடக்-கேட்டேனே
சாயி சமிதியில்-யாரும் குடும்பம்-போலே குலவிடக்-கண்டேனே

இணைந்திட சிறந்த இடமெனவே-நான் சமிதியைக் கொண்டேனே 
தரணியில்-சிறந்த இடமெனவே-நான் சமிதியைக் கொண்டேனே
இவை-யாவும் சாயி ப்ரேமையில் நிகழ்ந்த அற்புதம் என்பேனே 
அதி அற்புதம் என்பேனே 
கனியினும்-இனித்த தேன்-மொழியே இவர் பேசிடக்-கேட்டேனே
சாயி சமிதியில்-யாரும் குடும்பம்-போலே குலவிடக்-கண்டேனே

(Interlude)
ஓய்ந்து-கிடந்தால் தாங்கிப்-பிடிக்க சமிதியைப் போலே எங்குமுண்டோ .. ஓ..ஓ..
ஓய்ந்து-கிடந்தால் தாங்கிப்-பிடிக்க சமிதியைப் போலே எங்குமுண்டோ
குணத்தினில்-சேயோ எனும்-இவர்-இடையோர் ஒற்றுமை சாயி பேரருளோ
சேவையில்-கரமும் பேச்சினில் பணிவும் தன்னுருவாய் இவர் கொண்டதுவோ
வாழ-உலகில் பெய்யும்-மழைபோல் பொழிவது தான்-இவர் தன் குழைவோ
பொழிவது தான் இவர் தன்-குழைவோ
கனியினும்-இனித்த தேன்-மொழியே இவர் பேசிடக்-கேட்டேனே
சாயி சமிதியில்-யாரும் குடும்பம்-போலே குலவிடக்-கண்டேனே
(Interlude)
எதுகை-மோனை நிறைந்திடும் கவிபோல் சிறப்பது-தான் இவர் செயலழகோ
இளைஞர் அணியில் இறைவன் பணியைப் புரிவோர்க்கன்பே தாய் மொழியோ 
மனத்தினில் குழைவும் சேவையின் நிகழ்வும் சமிதியில் பார்த்திடும் நடை முறையோ  
முதியவர் கூறும் மொழியினைப் பேணும் இளையவர் பால் ஊர் கண்படுமோ 
இவை-யாவும் ஒன்றாய் சேர்ந்த-நம் சாயி  சமிதியைக் காண்பீரே
கனியினும்-இனித்த தேன்-மொழியே இவர் பேசிடக்-கேட்டேனே
சாயி சமிதியில்-யாரும் குடும்பம்-போலே குலவிடக்-கண்டேனே

சாயி கீதம்-6

முதல்பக்கம்

No comments:

Post a Comment