Showing posts with label விண்ணோடும் முகிலோடும். Show all posts
Showing posts with label விண்ணோடும் முகிலோடும். Show all posts

Friday, May 29, 2020

313. என்னோடும் உன்னோடும்( விண்ணோடும் முகிலோடும் )**

என்னோடும் உன்னோடும் இருந்தானே மானிடனாய் (1+SM+1)
விண்ணோடு துஞ்சும் பரமேசன் சாயிபிரான் சாயிபிரான்+(vsm)
என்னோடும் உன்னோடும் இருந்தானே சாயி பிரான்
(MUSIC)
அவன்நாமம்  மனதாலே நினைத்தாலே போதும் 
துணையாகி வரும்-ஊழின் வினையாவும் பறந்தோடி இன்றேபோகுமாம்
என்னோடும் உன்னோடும் இருந்தானே மானிடனாய்
விண்ணோடு துஞ்சும் பரமேசன் சாயி பிரான் சாயி பிரான்
என்னோடும் உன்னோடும் இருந்தானே சாயி பிரான்
(MUSIC)
தேனாகக் கேட்டிடுமே அன்பான சாயிகுரல் 
ஆத்மஸ்வரூபலாரா என்றுமே ப்ரேமஸ்வ..ரூப..லாரா என்றுமே         
வாராதோ அந்தநிலை தீராதோ எந்தன்வினை 
ஆ..வென்று ஏங்கும் மாந்தர் வாழ்விலே நாமமே
துணையாகி வரும்-ஊழின் வினையாவும் பறந்தோடி இன்றே போகுமாம்
என்னோடும் உன்னோடும் இருந்தானே சாயி பிரான்
(MUSIC)
சாயிகீதம் தனை-இசைத்து சாயிநாம ஜபம்புரிந்து 
அன்றாடம் சேவைசெய்து வாழவே (2)
குன்றாக வினைதடுத்து நின்றாடும் ஒளிகொடுத்து நன்..றாக சிறக்க மாந்தர் வாழ்விலே நாமமே
துணையாகி வரும்-ஊழின் வினையாவும் பறந்தோடி இன்றே போகுமாம்
ஆ ..ஆ
 என்னோடும் உன்னோடும் இருந்தானே மானிடனாய் 
விண்ணோடு துஞ்சும் பரமேசன் சாயி பிரான் சாயி பிரான்
என்னோடும் உன்னோடும் இருந்தானே சாயி பிரான்