Showing posts with label வாழ்க்கை எனும் ஓடம். Show all posts
Showing posts with label வாழ்க்கை எனும் ஓடம். Show all posts

Thursday, May 7, 2020

134. பாட்டில் சாயி மகிழ்ச்சி கொண்டானே(பாட்டும் நானே) **


பாட்டில்சா..யி மகிழ்ச்சி-கொண்டானே (2)
அவன்திருப் படத்தால் நீறுதந்தானே
பாட்டினில்சா..யி மகிழ்ச்சி-கொண்டானே
அவன்திருப் படத்தால் நீறுதந்தானே
பாட்டில்சா..யி மகிழ்ச்சி-கொண்டானே...
(MUSIC)
கூத்தின் சிவனும் பால்துயில்பவனும்
மா..னிடஉடலினில் வந்திடும் நம்சாயி
(2)
பாட்டில்சா..யி மகிழ்ச்சி-கொண்டானே
அவன்திருப் படத்தால் நீறுதந்தானே
பாட்டில்சா..யி மகிழ்ச்சி-கொண்டானே...
(MUSIC)
ஆசையை ....(SM)...போக்கும் ...(SM)..இறையும் சாயி
ஆசையைப் போக்கும் இறையும் சாயி
பாடும்மனதில் தூயவன்சாயி
எதிலும் எங்கும் இருப்பவன் சாயி (2)
சேவையைச்-செய்தால் வருவான்உலகே...
(Brief Oneline pause) 
நாம் அழைத்தால் வருவான் உலகத்தின்மீதே
(Short Music)
 நாம் அழைத்தால் வருவான் உலகத்தின்மீதே 
அறிவோம் அதுவும்அவன் சொல்லியதாலே 
பாடும்வாயுடனும் சேவைக்கைகளோடும் நாடும் நெஞ்சுடனும் நாமிசைக்குமொரு  
பாட்டில்சாயி மகிழ்ச்சிகொண்டானே
அவன்திருப் படத்தால் நீறுதந்தானே
பாட்டினில்சா..யி மகிழ்ச்சி-கொண்டானே...
 (ஜதி) & ஸ்வரம் 
Music
பாட்டினில்சாயி மகிழ்ச்சிகொண்டானே





Wednesday, May 3, 2017

128. சாயி தந்த பாடம் (வாழ்க்கை எனும் ஓடம்)





சாயி தந்த பாடம் என்றும்நெஞ்சில் ஓடும்
மானிடத்தின் வடிவத்திலே தெய்வம்-தந்த தாகும்
(2)
சாயிதந்த பாடம்
(MUSIC)
வாலிலாக்-குரங்கென மனம்தினம் ஓடும் 
அதில் வந்துனைமிரட்டும் எண்ணமும்ஒருகோடி
(2)
மனத்தில் நிறைபவன்தான் சாயீசன் நம்
மனத்தில் நிறைபவன்தான் சாயீசன் 
அவன் வந்தபின்னே நெஞ்சமாகும் பூப்போலே 
சாயி தந்த பாடம் என்றும்நெஞ்சில் ஓடும்
மானிடத்தின் வடிவத்திலே தெய்வம்-தந்த தாகும்
சாயிதந்த பாடம்
(MUSIC)
இடர்வந்துநெஞ்சைப் பிசையும்
அவற்றை போக்கிடும் சாயிராம் பாதம்
மறுமை கொடுப்பவன்பொல்லா உலகம்
வந்து காத்திடும் சாய்போ லிலையாரும் (2)
சாயிதந்த பாடம் என்றும்நெஞ்சில் ஓடும்
மானிடத்தின் வடிவத்திலே தெய்வம்-தந்த தாகும்
சாயிதந்த பாடம்