Showing posts with label உன்னைத்தான் நான் அறிவேன். Show all posts
Showing posts with label உன்னைத்தான் நான் அறிவேன். Show all posts

Monday, March 14, 2016

28. உன்னையே தேடிவந்தோம் ( உன்னைத்தான் நான் அறிவேன்)

உன்னையே தேடி வந்தோம் சாயி உன்னைச் சரணடைந்தோம்(2)
உன் அன்பு மலர்ப் பாதங்களில் சாந்தியினை நாடி வந்தோம்
உன்னையே தேடி வந்தோம் சாயி உன்னைச் சரணடைந்தோம்
(MUSIC)
கோடிஜன்மப் புண்ணியத்தால் ஜோதிஉன்னைத் தேடிவந்தோம்(2)
நாடிஉந்தன் அருள்பெறவே சேவைசெய்துப் பாடுகின்றோம்(2)
 சத்தியத்தில் நாட்டம் கொண்டோம் சத்தியத்தில் வாழ்ந்திருப்போம் 
உன்னையே தேடி-வந்தோம் சாயி-உனைச் சரணடைந்தோம்
(MUSIC)
பேதலித்த உயிர்களுக்கு சேவைசெய்த மன்னவனே (2)
சேவைசெய்த மனங்களிலே அன்புஒளி தந்தவனே (2)
அன்பு கொண்ட நெஞ்சினிலே வந்திருக்கும் ஆண்டவனே 
உன்னையே தேடி வந்தோம் சாயி உன்னைச் சரணடைந்தோம்
உன் அன்பு மலர்ப் பாதங்களில் சாந்தியினை நாடி வந்தோம்
உன்னையே தேடி வந்தோம் சாயி உன்னைச் சரணடைந்தோம்