Showing posts with label திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால். Show all posts
Showing posts with label திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால். Show all posts

Monday, March 29, 2021

561. அன்பினுக்கே உருவம் (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்) **

 


அன்பினுக்கே உருவம் ஒன்று உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-சத்ய சாயி முகம்
(2)
(MUSIC)
புகலின் புகலாக எதுவாகும்-நம் 
சாயியின் பாதமே அதுவாகும்
(2)
அன்பினுக்கே உருவம் ஒன்று உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-சத்ய சாயி முகம்
 (MUSIC)

உலகமெல்லாம் எவரும் தேடிவரும் வண்ணம் 
அன்பாலே கவர்ந்திழுக்கும் அவருதயம்
(2)
என்-பணி நில்லாது அது தொடரும் (2)
என்ற அந்நாளே சொன்னாரே  நமக்கவரும் (2)
அன்பினுக்கே உருவம் ஒன்று உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-சத்ய சாயி முகம்
 (MUSIC)

நம்-சிறப்பே தனது வாழ்க்கை என்று-தன்
பொன்னான திருமேனி தான் இளைத்து
(2)
சளைக்காமல் எந்நாளும் தான் உழைத்து (2)
என்றும் நினைவாக வாழ்கிறார் மனம் நிறைந்து (2)
அன்பினுக்கே உருவம் ஒன்று உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-சத்ய சாயி முகம்
புகலின் புகலாக எதுவாகும்-நம் 
சாயியின் பாதமே அதுவாகும்
அன்பினுக்கே உருவம் ஒன்று உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-சத்ய சாயி முகம்


முதல்பக்கம் 



Monday, June 8, 2015

7. புட்டபர்த்தி தலத்தினிலே ( திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் )

Click here to listen to the Original Song


( திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் )


புட்டபர்த்தி தலத்தினிலே அவதரித்தாய் பாபா 
அன்பையே மனத்தினிலே நீவிதைத்தாய்
(2 times)

(Short Musicz)
ப்ரசாந்தி நிலையத்திலே வந்திருந்தாய்-உன்
 ப்ரேமையிலே உலகைக் கவர்ந்திழுத்தாய்
(2 times)
புட்டபர்த்தி தலத்தினிலே அவதரித்தாய் பாபா
அன்பையே மனத்தினிலே நீவிதைத்தாய்

(MUSIC)

அன்பினிலே உலகை ஆட்சி செய்தாய்-நீ
  சேவையிலே மகிழ்ந்து காட்சி தந்தாய்
 (2 )
வருந்திடும் நெஞ்சினிலே துயர் துடைத்தாய் (2)
நாங்கள் அறியாமல் செய்யும்பிழை பொறுத்திருந்தாய் (2)
புட்டபர்த்தி தலத்தினிலே அவதரித்தாய் பாபா
அன்பையே மனத்தினிலே நீவிதைத்தாய்
(MUSIC)
உதிர்ந்துவிழும் திரு நீறைத் தந்தாய் நீ 
வருந்தியழும் உயிரின் துயர் துடைத்தாய்
(2 times)
உலகிலே அற்புதங்கள் பலபுரிந்தாய்(2 times) 
அங்கு தீராத நோய்தீர்த்தாய் நீ மருந்தாய்(2 times)
 புட்டபர்த்தி தலத்தினிலே அவதரித்தாய் பாபா 
அன்பையே மனத்தினிலே நீவிதைத்தாய்
ப்ரசாந்தி நிலையத்திலே வந்திருந்தாய்
உன் ப்ரேமையிலே உலகைக் கவர்ந்திழுத்தாய்

புட்டபர்த்தி தலத்தினிலே அவதரித்தாய் பாபா 
அன்பையே மனத்தினிலே நீவிதைத்தாய்