Monday, March 29, 2021

561. அன்பினுக்கே உருவம் (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்) **

 


அன்பினுக்கே உருவம் ஒன்று உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-சத்ய சாயி முகம்
(2)
(MUSIC)
புகலின் புகலாக எதுவாகும்-நம் 
சாயியின் பாதமே அதுவாகும்
(2)
அன்பினுக்கே உருவம் ஒன்று உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-சத்ய சாயி முகம்
 (MUSIC)

உலகமெல்லாம் எவரும் தேடிவரும் வண்ணம் 
அன்பாலே கவர்ந்திழுக்கும் அவருதயம்
(2)
என்-பணி நில்லாது அது தொடரும் (2)
என்ற அந்நாளே சொன்னாரே  நமக்கவரும் (2)
அன்பினுக்கே உருவம் ஒன்று உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-சத்ய சாயி முகம்
 (MUSIC)

நம்-சிறப்பே தனது வாழ்க்கை என்று-தன்
பொன்னான திருமேனி தான் இளைத்து
(2)
சளைக்காமல் எந்நாளும் தான் உழைத்து (2)
என்றும் நினைவாக வாழ்கிறார் மனம் நிறைந்து (2)
அன்பினுக்கே உருவம் ஒன்று உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-சத்ய சாயி முகம்
புகலின் புகலாக எதுவாகும்-நம் 
சாயியின் பாதமே அதுவாகும்
அன்பினுக்கே உருவம் ஒன்று உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-சத்ய சாயி முகம்


முதல்பக்கம் 



No comments:

Post a Comment