Saturday, August 21, 2021

558. அன்பு நாடகம் (துன்பம் நேர்கையில்) **

 


அன்பு-நாடகம் பார்-நடத்திட வந்துதிக்க மாட்டாயா (3)
நீ வந்துதிக்க மாட்டாயா (2)
என் கண்கொளாக் காட்சி ..
கண்கொளாக் காட்சி எதிரில்-காட்டி (2)
இன்பம் சேர்க்க மாட்டாயா
சாயீ இன்பம் சேர்க்க மாட்டாயா (2)
(MUSIC)
அன்பும் ப்ரேமையும் சூழப் பாரிலே (2)
மாந்தர் உணர்வு ஒங்க (2)
ஆ ..  மாந்தர் உணர்வு ஒங்க
நீ அன்றுரைத்த உன் கூற்றைப் போலவே
அன்றுரைத்த-உன் கூற்றைப் போலவே (3)
அவதரிக்க மாட்டாயா
ஸ்வாமி அவதரிக்க மாட்டாயா (2)
(MUSIC)
புரிதலுற்று நான் அறிதல்-எங்கு-நீ அருகில்லாத போது (2)
நீ அருகில்லாத போது
ஓர் குருவில்லாமல் .. புவி-மீதிலே
(SM)
என்றும் தன்னை உணராமல் ஓர் வாழ்க்கை
தன்னில் பயனும் ஏது (2)
குருவில்லாமல் புவி-மீதிலே
ஓர் குருவில்லாமல் புவி வாழ்வுமே   
பெரும்-வீண் நீ-அறிய மாட்டாயா
நீ- 
அறிந்திருக்க மாட்டாயா
அன்றுரைத்த-உன் கூற்றைப் போலவே
அவதரிக்க மாட்டாயா
ஸ்வாமி அவதரிக்க மாட்டாயா
(MUSIC)
ப்ரேம-ரூபமே ஆத்ம-ரூபமே என்ற-உந்தன் வார்த்தை  (2)
என் ஸ்வாமி உந்தன் வார்த்தை (2)
சுவை அமுதமாக-என் காதிலே (2)
உன் சொல் மீண்டும் கேட்க கூறாயா
ஸ்வாமி கேட்க கூற மாட்டாயா
உன் அன்பைப் போட்டி என்னைப் போன்ற சேய்களின்
துன்பம் போக்க மாட்டாயா
உடன் துன்பம் போக்க மாட்டாயா (2)
அன்பு-நாடகம் பார்-நடத்திட வந்துதிக்க மாட்டாயா
நீ வந்துதிக்க மாட்டாயா..


முதல்பக்கம் 


No comments:

Post a Comment