எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது
எனது எனது என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது
(MUSIC)
தனக்கென்று ஆசையை வென்று பிறர்க்கென்று சே..வை செய்து
மனம்-கண்ட இன்..பம்-எல்லாம் சொல் சொல்லக் கூடுமோ
தனக்கென்ற ஆசையை வென்று பிறர்க்கென்று சே..வை செய்து
மனம்-கண்ட இன்..பம்-எல்லாம் சொல் சொல்லக் கூடுமோ
செய்வது யாரு என்பதைச் சொன்னால் சேவையும் ஆகிடுமோ
எனச் சொல்லித் தந்த பெருமா எனச் சொன்ன சாயி பெருமா!
எனது எனது என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது நெஞ்சம் தானாய் மாறுது
(MUSIC)
எதற்கென்று சேவையைச் செய்யும் மனம்-எண்ண வேண்டும் கொஞ்சம்
எனச்-சொன்ன சாயி போதம் நமக்கான வேதமாம்
எதற்கென்று சேவையைச் செய்யும் மனம்-எண்ண வேண்டும் கொஞ்சம்
எனச்-சொன்ன சாயி போதம் நமக்கான வேதமாம்
நல்மனம் நின்ற சாயி-உன்-அன்பே பாதையைக் காட்டியது
அதில் ஏது மனிதக் கணக்கு அதில் ஏது மனிதப் பிணக்கு
எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது..நெஞ்சம் தானாய் மாறுது