Showing posts with label வளர்த்த கடா முட்ட வந்தா. Show all posts
Showing posts with label வளர்த்த கடா முட்ட வந்தா. Show all posts

Sunday, May 31, 2020

477. துன்பமின்னா என்னங்க(வளர்த்த கடா முட்ட வந்தா) **



துன்பமின்னா என்னங்கண்ணே 
சோகமென்ன..வெலைங்கண்ணே 
அதுங்க..ளெல்லாம்என்ன-ஒண்ணும் பண்ணாதே 
சொல்லிப்புட்டேன் சாயி-பேரை 
செஞ்சுப்புட்டேன் அன்பு-சேவை 
சேந்துக்கிட்ட சாயி-சமிதி ஒண்ணாலே (2) 
(1+SM+1+MUSIC)
பவ-பய மாயமில்லை யமபயம் எனக்கு-இல்லே (2)
சாயிநாமம் சொல்லிப்புட்டேன் முன்னாலே
சாயிகீதம் சாயி-நாமம் ரெண்டுந்தான் எனக்குச்-சுகம்
மத்ததெல்லாம் எனக்கு-அதுக்குப் பின்னாலே
சொத்து-சுகம் நிக்குமா-அதுக்கு முன்னாலே
துன்பமின்னா என்னங்கண்ணே 
சோகமின்னா என்னங்கண்ணே 
அதுங்க..ளெல்லாம்என்ன-ஒண்ணும் பண்ணாதே (2) 
(MUSIC)
சாயி-என்ற பேரிருக்கே அவன்-திரு நீறிருக்கே (2)
என்ன-பயம் எனக்கு-இங்கே சொல்லண்ணே
அடடா அவன்-நடந்தா அந்த-காட்சி தினம்-கெடச்சா  
சொர்க்கத்திலே என்ன-இருக்கு அண்ணாச்சி
பரமபதம் அவன்-திருவடி கால்-தூசு       
துன்பமின்னா என்னங்கண்ணே 
சோகமின்னா என்னங்கண்ணே 
அதுங்க..ளெல்லாம்என்ன-ஒண்ணும் பண்ணாதே (2) 
(MUSIC)
செத்துவிழும் நேரத்துக்குக் கிங்கரர்கள்-காத்திருக்க  
சொத்து-வந்து காத்திடுமா சொல்லண்ணே
(2) 
நோயிலே நாம்சுருண்டு பாயிலே விழுந்து-விட்டால்
யாரு-உன் துணையிருப்பார் சொல்லண்ணே
சாயி பேர்-தானே காத்திருக்கும் என்-அண்ணே (3)