Showing posts with label சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே. Show all posts
Showing posts with label சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே. Show all posts

Saturday, May 16, 2020

261. வந்திடுவாய்உலகு (சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே ) **


விருத்தம்
அன்பே  உருவாகி மண் வந்தாய் சாயீசா 
தந்தாய் அதை யார்க்கும் தந்தாயே இருந்து மண்ணில் 
சொன்னாய் மண்ணில் உந்தன் திரு வருகை மூன்று என்றே 
அய்யா அதை உனக்கு நினைவு கூர்ந்தேன் வருவாயே 
_________________


வந்திடுவாய் உலகு சாயி பெருமா..! இறைவா
வந்திடுவாய் உலகு சாயி பெருமா
மண்ணில் நீதந்த அன்பினுக்கு ஈடு வருமா
வந்திடுவாய் உலகு சாயி பெருமா
மண்ணில் நீதந்த அன்பினுக்கு ஈடு வருமா
வந்திடுவாய் உலகு சாயி பெருமா..!
(SHORT MUSIC)
பேதம் இல்லாமல் ஒரு தாய் எனவே (2)
வந்த உன்னை அல்லால் வேறு துணையுமில்லை
வந்திடுவாய் உலகு சாயி பெருமா..!
 (MUSIC)
துன்பப் பெருக்கில் உந்தன் சேய் உருக
அந்த வைகுண்டத்தின் உள்ளே நீ சிறக்க
(2)
சாத்தியமா உனக்கு படுத்திருக்க (2)
உடன் என்னெதிரே வந்திடுவாய் கதிஅளிக்க.. இறைவா
வந்திடுவாய் உலகு சாயி பெருமா..!
 (MUSIC)
மண்ணை அடைந்து-உந்தன் நாடகமே
மீண்டும் நடத்திடுவாய்-மனிதக் கோலத்திலே
(2)
வெண்ணை என்றே உருகும் உயிர்களுக்கே   (2)
உடன் மண்ணில் வந்தே அன்பளிக்க எண்ணத்துடனே .. இறைவா
(MUSIC)
வந்திடுவாய் உலகு சாயி பெருமா
மண்ணில் நீதந்த அன்பினுக்கு ஈடு வருமா
வந்திடுவாய் உலகு சாயி பெருமா..! இறைவா