Showing posts with label சிந்து நதியின் மிசை. Show all posts
Showing posts with label சிந்து நதியின் மிசை. Show all posts

Saturday, May 30, 2020

364. வந்து புவியின் மிசை(சிந்து நதியின் மிசை) **


வந்து புவியின்மிசை உடலுடனே
சாயிராம் எனும்திருப் பெயருடனே
அன்பினை தினமும்பார் அளித்தவனே
ப்ரேமையே மீண்டும் விரைவாக வருவாய்  
ஆஹாஹா.. ஹாஹா.. ஹாஹா.. ஹாஹா..ஹா (4)
உன்கை நீறளித்து நோயைக் களைந்தாய் (2)
ஆறென நீரளித்துப் பஞ்சம் களைந்தாய்
 நெஞ்சம் கனிந்து அன்புச் சேவை செய்து  
ஞாலத்துத் தந்தைஉனை தினம் துதிப்போம்  
வந்து புவியின் மிசை உடலுடனே
சாயிராம் எனும் திருப் பெயருடனே
அன்பினைத் தினமும் பார் அளித்தவனே
ப்ரேமையே மீண்டும் விரைவாக வருவாய்
(MUSIC)
மனசினில் நீபூசும் அன்பொரு களிம்பாகும் (2)
அதிலே மனச்சோகம் எனும்-பெரும் நோய்போகும் (2)
மனசினில் நீபூசும் அன்பொரு களிம்பாகும் 
MUSIC)
நீகண் பார்-போதும் ஆஹா.... அதிலெங்கள் வினை போகும்
தினமும் வைபோகம் ஆஹா.... உன்தரி..சனம்ஆகும் 
மனிசிலே உல்லாசம் ஆஹா.... நீ வர உருவாகும் 
ப்ரேமையுன் அவதாரம் ஆஹா.... பார் வரவே..றெது-வேணும்
ஆஹாஹா.. ஹாஹா.. ஹாஹா.. ஹாஹா..ஹா…
(MUSIC)
 அனுதினம்-நாம் சாயி கீதமிசைத்தோம்
அன்புடன் நீ கொடுத்த சேவை புரிந்தோம் 
எங்களை நாடிவர நீயுமிசைவாய் 
மெய்யெனும் மெய்யெடுத்து வந்திடு-ஐயா
வந்து புவியின்மிசை உடலுடனே
சாயிராம் எனும்திருப் பெயருடனே
அன்பினை தினமும்பார் அளித்தவனே
ப்ரேமையே மீண்டும் விரைவாக வருவாய்  
ஆஹாஹா.. ஹாஹா.. ஹாஹா.. ஹாஹா..ஹா…