Showing posts with label நான் உன்னைச் சேர்ந்த செல்வம். Show all posts
Showing posts with label நான் உன்னைச் சேர்ந்த செல்வம். Show all posts

Saturday, May 9, 2020

198. நான் உன்னைப் பாடும் (நான் உன்னைச் சேர்ந்த செல்வம்) **



நான் உன்னைப் பாடும்பிள்ளை நீ என்னைக் காக்கும்தந்தை
நீ மண்ணில்தங்க வேண்டும் உன் அன்பைத்-தூவ-வேண்டும் 
(MUSIC)
உன் பாச..மள்ளித்தரும் மாண்பு
இருகண்கள் கொண்டளிக்கும் அன்பு
எனதாகும்  நாள்பிறக்கும் ஆசை 
அதில் எழுதும்-பாடல் ஒருபூஜை (2)
நான் உன்னைப் பாடும்பிள்ளை நீஎன்னைக் காக்கும்தந்தை
நீ மண்ணில் தங்கவேண்டும் உன்அன்பைத் தூவவேண்டும்
(MUSIC)
ஸ்ரீ ராமன் கலியுகத்தில் சாயி 
அந்தக் கண்ணன் திருஉருவம் சா..யி 
மனம்உருகி நாடிவந்த பேரை
நன்று காக்கும் அன்புகொண்ட தாயே
உன் விரல்கள் இடையில் வரும் நீறே
அதில் போகும்  விழிகள் கொண்ட நீரே
உன் குரலே தேனமுது ஊட்டும்
அதைத் தேடி சேய்கள் நெஞ்சம் ஏங்கும் (2)
 நான் உன்னைப் பாடும் பிள்ளை நீ என்னைக்-காக்கும் தந்தை
நீ மண்ணில் தங்கவேண்டும் உன் அன்பைத் தூவவேண்டும்
(MUSIC)
எனை-அச்சம் நாளும்வந்து வாட்டும்
நீ அருகில் இருக்கஅது ஓடும்
சித்தம் குரங்குபோல தினம்ஆடும்
உந்தன் பாதம் கண்டவுடனடங்கும் (2)

நான் உன்னைப் பாடும் பிள்ளை நீ என்னைக் காக்கும் தந்தை
நீ மண்ணில் தங்க வேண்டும் உன் அன்பைத் தூவ வேண்டும்
(BOTH)