Showing posts with label தங்கப் பதக்கத்தின் மேலே. Show all posts
Showing posts with label தங்கப் பதக்கத்தின் மேலே. Show all posts

Thursday, July 18, 2024

648.வைரக்குவியலின் மேலே(தங்கப் பதக்கத்தின் மேலே) **



 


வைரக்-குவியலின் மேலே ஒரு மின்னல்-வெட்டியது போலே
கொண்ட எங்களின் புண்ணியத்தாலே 
கண்ட ஜோதி உன் புன்னகை தானோ  
இல்லை சாயி உன் பொன்னடி தானோ 
( 1+ஆ..+1 )
(MUSIC)
என்றைக்கும் நெஞ்சத்தில் ஆசை-புகுந்து -
தின்னக்-குடைந்திடும் வண்டு
(2)
அது கோடி-இன்னும் சேர்க்கும் எண்ணம் 
தன்னைத் தருகுது-வந்து
(2)
அதற்கு விடையைக் கொடுக்கும்-மனதை எக்குத்-தந்தாயே 
து-இதயம் புகுந்து-உனது கடைவிரித்தாயே
வைரக்-குவியலின் மேலே ஒரு மின்னல்-வெட்டியது போலே
கொண்ட எங்களின் புண்ணியத்தாலே 
கண்ட ஜோதி உன் புன்னகை தானோ  
இல்லை சாயி உன் பொன்னடி தானோ 
(MUSIC)
பொன்னாலே-கிட்டாத நல்லதிருக்கு உந்தன்-இதயத்தின் உள்ளே 
(2)
எனக்காட்டித்-தடுத்து ஊட்டிக்-கொடுத்த- 
உண்மை-உன் அற்புதம்-என்னே
(2)
இனியும்-மது மனது-உலகின் இடம்-இருக்காதே 
உனது-அடியின் சுவடு-மனதில் பதிந்திட்டதாலே
வைரக்-குவியலின் மேலே ஒரு மின்னல்-வெட்டியது போலே
கொண்ட எங்களின் புண்ணியத்தாலே 
கண்ட ஜோதி உன் புன்னகை தானோ  
இல்லை சாயி உன் பொன்னடி தானோ 
(MUSIC)
இத்தோடு-முற்றாத சஞ்சிதம்-தன்னை செத்து-விழுந்திடச் செய்தே
(1+SM+1)
நிஜமான-முழுதின் ஞான-ஒளியை நெஞ்சில்-தெளித்தது என்னே
(2)
நேரும்-கூரும் ஆச்சு-எங்கள் நெஞ்சம்-இப்போது (2)
அதில்-ஞான ஜ்வாலை வீசும்போது கோது-பற்றாது (2)
வைரக்-குவியலின் மேலே ஒரு மின்னல்-வெட்டியது போலே
கொண்ட எங்களின் புண்ணியத்தாலே 
கண்ட ஜோதி உன் புன்னகை தானோ  
இல்லை சாயி உன் பொன்னடி தானோ 
ஆ.





Wednesday, July 17, 2024

647.கெஞ்சி அழுதிடும் நெஞ்சே(தங்கப் பதக்கத்தின் மேலே) **




கெஞ்சி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே
தினம் சத்திய சாயியின் முன்னே
அட நின்று-நீ கெஞ்சிடலாமோ
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ
ஆ..
கெஞ்சி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே
தினம் சத்திய சாயியின் முன்னே
அட நின்று-நீ கெஞ்சிடலாமோ
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ
(MUSIC)
அன்னைக்கும் பிள்ளைக்கும் பேசிடவென்றே நெஞ்சின் மொழியொன்று உண்டு (2)
நீ ஓடி-தூரம் போன-போதும் உந்தன்-அருகினில் நின்று (2)
உனது-நலனைத் தனது-உயிரில் பிணைத்திருப்பாளே
அந்த-அன்பின் கோடி-மடங்கு சாயி பிரானே
கெஞ்சி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே
தினம் சத்திய சாயியின் முன்னே
அட நின்று-நீ கெஞ்சிடலாமோ
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ
(MUSIC)
எட்டானே-கிட்டானே என்று-உரைத்துக் கெஞ்சி-அழைப்பது என்ன (2)
*உனக்காக-எதையும் புரியும்-நண்பன் தன்னி..டத்தில்-பயம் என்ன (2)
இனியும்-சாயி எதிரில்-பயத்தின் குளிர்-விலக்காயோ
அவனின் தோளில் கைகள் போட்டு நிதம்-பழகாயோ
கெஞ்சி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே
தினம் சத்திய சாயியின் முன்னே
அட நின்று-நீ கெஞ்சிடலாமோ
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ
(MUSIC)
சத்தோடும் சித்தாம்-ஆ..னந்த-இறைவன் உன்னைப்-படைத்ததன் பின்னே
(MUSIC)
சத்திய சத்-சச்சிதானந்த சாயி  உன்னைப்-படைத்ததன் பின்னே
எந்த நாளும்-போதும் உந்தன்-நினைவில் பொங்கி-இருப்பதும் என்னே (2)
தாயும்-இறைவன் ஆக-பயத்தின் கெஞ்சல்-அங்கேது (2)
இறைத் தாயின்-தோளில் ஏறி-உந்தன் கைகள்-விட்டாடு
மனம் போலத்-தோளில் ஏறி-உந்தன் கைகள்-விட்டாடு
கெஞ்சி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே
தினம் சத்திய சாயியின் முன்னே
அட நின்று-நீ கெஞ்சிடலாமோ
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ

*நீங்கள் இறைவனை ஒரு துணைவனாக,தோழனாக பாவிக்கும் போது தான் அவன் மிகவும் மகிழ்கிறான்