Showing posts with label நெஞ்சுக்கு நிம்மதி. Show all posts
Showing posts with label நெஞ்சுக்கு நிம்மதி. Show all posts

Wednesday, March 16, 2016

30. நெஞ்சுக்கு நிம்மதி ஸ்வாமியின் சந்நிதி ( நெஞ்சுக்கு நிம்மதி )





நெஞ்சுக்கு நிம்மதி ஸ்வாமியின் சந்நிதி 
எல்லாம் கிடைக்கும் பர்த்தியிலே
துஞ்சிடும் ஒளியும் பொங்கிடும் அருளும்
சாந்தியை நல்கும்ப்ர சாந்தியிலே (2)
(MUSIC)
விரும்பும் வரமங்கு கிடைக்கிறது பல நல்லது அங்கே நடக்கிறது
பாசம் நேசம் அன்பும் அருளும் தானே அங்கே கிடைக்கிறது
ஒளி எழுகிறது .....! கழல் தெரிகிறது..!
ஒளி எழுகிறது கழல் தெரிகிறது அவன் அருளினி..லேமதி தெளிகிறது
நெஞ்சுக்கு நிம்மதி ஸ்வாமியின் சந்நிதி எல்லாம் கிடைக்கும் பர்த்தியிலே
துஞ்சும் ஒளியும் பொங்கிடும் அருளும் சாந்தியை நல்கும்ப்ர சாந்தியிலே (2)
(MUSIC)
வாழ்க்கையில் எத்தனை..யோஅடிகள் அதைத் தாங்கிட பலம்தரும் சேவடிகள்
பாதையி லேஓளி பெற்றிடவேவழி பர்த்திபுரீசனின் திருவடிகள் 
அதை நினைத்து விடு மனக் கவலை விடு
அதை நினைத்து விடு மனக் கவலை விடு
அவன் நெஞ்சினில் நின்றிடப் பாடுபடு 

நெஞ்சுக்கு நிம்மதி ஸ்வாமியின் சந்நிதி
 எல்லாம் கிடைக்கும் பர்த்தியிலே
துஞ்சும் ஒளியும் பொங்கிடும் அருளும்  
சாந்தியை நல்கும்ப்ர சாந்தியிலே (2)