Showing posts with label ஆயர்பாடி மாளிகையில். Show all posts
Showing posts with label ஆயர்பாடி மாளிகையில். Show all posts

Monday, March 21, 2016

43. பாடல் கேட்டு தாய் மடியில் ( ஆயர்பாடி மாளிகையில்)***

பாடல்கேட்டுத் தாய்மடியில் பால்குடித்து வளர்ந்திடாமல்
சேவைசெய்து சிறந்திருந்தாய் சாயீசா 
(1+Short Music+1)
 நீ மனம்நிறைய அன்புகொண்டு தொண்டுகளைப் புரிந்துநின்று
உலகினுக்கே வழிகொடுத்தாய் சாயீசா (2)
பாடல்கேட்டுத் தாய்மடியில் பால்குடித்து வளர்ந்திடாமல்
சேவைசெய்து சிறந்திருந்தாய் சாயீசா 
(MUSIC)
கன்னக்குழி சிரிப்பினிலே கன்னல்மொழிச் சொல்லினிலே 
மன்னுயிர்க்கு அருள்புரிந்தாய் சாயீசா
(2)
அந்த வார்த்தையிலே செவிகுளிரும் சிரிப்பினிலே மனம்குளிரும்
என்றுமீண்டும் நீவருவாய் சாயீசா (2)
பாடல்கேட்டுத் தாய்மடியில் பால்குடித்து வளர்ந்திடாமல்
சேவைசெய்து சிறந்திருந்தாய் சாயீசா 
(MUSIC)
பூமிகொண்ட வறட்சியிலே மாநிலமும்வாடிவிட
அருள்புரிந்து நீர்சொரிந்தாய் சாயீசா
(2)
இந்தபாரினிலே நீரிலையே என்றமொழி இனிஇலையே
என்றிடவே செய்தவனே சாயீசா 
எம்மனத்தைக் கொய்தவனே சாயீசா
பாடல்கேட்டுத் தாய்மடியில் பால்குடித்து வளர்ந்திடாமல்
சேவைசெய்து சிறந்திருந்தாய் சாயீசா 
(MUSIC)
சாயிராமன் அவதரித்தான் துன்பங்களைத் துடைத்திருந்தான் 
என்னும்மொழி ஒலிக்குதடா சாயீசா
(2)
அந்தஇன்பத்திலே உலகிருக்க நிம்மதியாய்வாழ்ந்திருக்க
மண்ணைவிட்டு ஏன்பறந்தாய் சாயீசா
பிழைபொறுத்து வந்தருள்வாய் சாயீசா 
பாடல்கேட்டுத் தாய்மடியில் பால்குடித்து வளர்ந்திடாமல்
சேவைசெய்து சிறந்திருந்தாய் சாயீசா (2)