Showing posts with label பாலும் பழமும். Show all posts
Showing posts with label பாலும் பழமும். Show all posts

Thursday, February 17, 2022

584.வாழும் உலகில்(பாலும் பழமும் கைகளில் ஏந்தி) ***

ம்..ம்ம் ..
(Interlude)
வாழும் உலகில் அனைவரும் ஒன்றே யாரும் ப்ரேமை உருவகம் என்றே
வேதம் உரைக்கும் உண்மை சொன்னாயே சாயி உந்தன் அன்பு தந்தாயே
வாழும் உலகில் அனைவரும் ஒன்றே யாரும் ப்ரேமை உருவகம் என்றே
வேதம் உரைக்கும் உண்மை சொன்னாயே சாயி உந்தன் அன்பு தந்தாயே
(music)
உண்ணும் உணவைப் பரிந்தளித்தாயே பருகும் நீரைச் சொரிந்தளித்தாயே (2)
அறிவின் கண்ணைத் திறந்து வைத்தாயே பணிவை நெஞ்சில் பதிய வைத்தாயே (2)
வாழும் உலகில் அனைவரும் ஒன்றே யாரும் ப்ரேமை உருவகம் என்றே
வேதம் உரைக்கும் உண்மை சொன்னாயே சாயி உந்தன் அன்பு தந்தாயே
(music)
தாயைப் போலே கரிசனத்தாலே தினமும் நீ தரும் தரிசனத்தாலே (2)
சேயைப் போலே அழும்-ஜனம் தானே சிரிக்க அன்பை அளித்தணைத்தாயே (2)
வாழும் உலகில் அனைவரும் ஒன்றே யாரும் ப்ரேமை உருவகம் என்றே
வேதம் உரைக்கும் உண்மை சொன்னாயே சாயி உந்தன் அன்பு தந்தாயே
(music)
என்றும் கோபம் நீ கொண்டதில்லை உயிரில் பேதம் நீ கண்டதில்லை (2)
அன்பைக் கொடுத்தே அன்பால் நிறைத்தே உலகு முழுதும் கவர்ந்னை சாயி (2)
வாழும் உலகில் அனைவரும் ஒன்றே யாரும் ப்ரேமை உருவகம் என்றே
வேதம் உரைக்கும் உண்மை சொன்னாயே சாயி உந்தன் அன்பு தந்தாயே
ம்..ம்ம்

முதல்பக்கம்

Wednesday, February 16, 2022

583.நாவில் சாயி எனும் பெயர் கூறி(பாலும் பழமும் கைகளில் ஏந்தி)

ம்..ம்ம் 
(Interlude)
நாவில் சாயி எனும்-பெயர் கூறி உதவும்-கரத்தால் சேவையை ஆற்றி
உலகில்-வாழ்ந்தால் அதனுக்கும்-மேலே வேறு இல்லை ஆராதனையே
(2)
(music)
பஞ்சின் இதயம் ஆராதனையே கொடுக்கும் இதமும் ஆராதனையே (2)
துடிக்கும் மனிதர் படும் வேதனையை விலக்கும் எதுவும் ஆராதனையே (2)
நாவில் சாயி எனும்-பெயர் கூறி உதவும்-கரத்தால் சேவையை ஆற்றி
உலகில்-வாழ்ந்தால் அதனுக்கும்-மேலே வேறு இல்லை ஆராதனையே
(music)
சாயி நாம சங்கீர்த்தனமே கேட்க மனதும் உருகும் விதமே (2)
பாடும்-போதும் ஆராதனையே சாயி-கீதம் ஆராதனையே 
சாயி நாமம் ஆராதனையே சாயி கீதம் ஆராதனையே
நாவில் சாயி எனும்-பெயர் கூறி உதவும்-கரத்தால் சேவையை ஆற்றி
உலகில்-வாழ்ந்தால் அதனுக்கும்-மேலே வேறு இல்லை ஆராதனையே
(music)
செயலில் துணிவு ஆராதனையே சொல்லில் பணிவு ஆராதனையே (2)
கல்லின் பொறுமை ஆராதனையே வெல்லும் மேன்மை முடிவாய்த் தருமே (2) 
நாவில் சாயி எனும்-பெயர் கூறி உதவும்-கரத்தால் சேவையை ஆற்றி
உலகில்-வாழ்ந்தால் அதனுக்கும்-மேலே வேறு இல்லை ஆராதனையே
ம்..ம்ம்

Sunday, May 7, 2017

121. நாளும் பொழுதும் ( பாலும் பழமும் ) ***

நாளும் பொழுதும் கைகளைத் தூக்கி
அருளுவாயே புன்னகைசிந்தி
தினமும்எழிலாய் நீ வருவாயே
தெய்வமுன்தரி..சனம்-தருவாயே
(Music)
உண்ணும் உணவை அளித்திடும் தாயே
உறங்கும் மனதை எழுப்பி விட்டாயே  
துன்பச் சுமையைக் குறைத்தவன் நீயே
எங்கள் அன்புத் தந்தையும் நீயே 
(Brief Pause)
நாளும்பொழுதும் கைகளைத்தூக்கி
அருளுவாயே புன்னகை சிந்தி
தினமும்எழிலாய் நீ வருவாயே
தெய்வமுன்-தரி..சனம்-தரு..வாயே
(Music)
பிஞ்சுக் குழந்தை நெஞ்சுகொண்டாயே
பேசிப்பழகும் இறைவனும் நீயே
அஞ்சி நடுங்கும் உயிர் காப்பாயே
அன்னை மடியே எங்குநீ சாயி
(Brief Pause)
நாளும்பொழுதும் கைகளைத்தூக்கி
அருளுவாயே புன்னகை சிந்தி
தினமும்எழிலாய் நீ வருவாயே
தெய்வமுன்-தரி..சனம்-தரு..வாயே
(Music)
ஈன்ற தாயாய் அணைக்கஎன்சாயி
தினமும் அருகினில் இருந்து வந்தாயே
உயிரைக்கொடுத்தே எமைக் காத்தாயே
துயரைக் கொடுத்தே உயரச்சென்றாயே
(Brief Pause)
நாளும்பொழுதும் கைகளைத்தூக்கி
அருளுவாயே புன்னகை சிந்தி
தினமும்எழிலாய் நீ வருவாயே
தெய்வமுன்-தரி..சனம்-தரு..வாயே ம்ம்ம்.. ம்ம்ம்..ம்ம்ம்ம்..