Showing posts with label பூ மாலையில். Show all posts
Showing posts with label பூ மாலையில். Show all posts

Tuesday, June 6, 2023

633.கைலாயமும்(பூ மாலையில்) **

ஆ...
கைலாயமும் வைகுண்டமும் ஒன்று சேர்ந்தே காண்கின்றதோ
என்று தோன்றும் சாயி குல்வந்த் சபை தன்னில் தெய்வம் வா என்குதோ
(2)
(MUSIC)
தெய்வம் தினம் தினம் நடந்து கண்காணும்
ஆ...
விதமே தரிசனம் தந்ததெப்போதும்
ஆ...
தெய்வம் தினம் தினம் நடந்து கண்காணும்
விதமே தரிசனம் தந்ததெப்போதும்
அதுவே சொர்க்கம் எனவே உரைக்கும் (2)
விதமாய் இருக்கும் இதமாய் இனிக்கும்
பதமாய் இனிக்கும் இதமாய் இருக்கும்
கைலாயமும் வைகுண்டமும் ஒன்று சேர்ந்தே காண்கின்றதோ
என்று தோன்றும் சாயி குல்வந்த் சபை தன்னில் தெய்வம் வா என்குதோ
(MUSIC)
பஞ்சும் மலர்களும் நாணிக் கண்மூடும்
ஆ..
என்றிட இருக்கும்-உன் பாதத்தைக் காணும்
ஆ..
பஞ்சும் மலர்களும் நாணிக் கண்மூடும்
என்றிட இருக்கும் உன் பாதத்தைக் காணும்
கணமே நிஜத்தை அதுவே விளக்கும்
கணமே நிஜத்தை நிஜமே விளக்கும்
புதிரே புரிவாய் துலங்கும் தருணம்
புதிரைப் புதிரே விளக்கும் தருணம்
கைலாயமும் வைகுண்டமும் ஒன்று சேர்ந்தே காண்கின்றதோ
என்று தோன்றும் சாயி குல்வந்த் சபை தன்னில் தெய்வம் வா என்குதோ
சாயி தெய்வம் வா என்குதே

Wednesday, March 1, 2023

609.ஹே சாயிராம் என் தெய்வமே(பூ மாலையில் ஓர் மல்லிகை)**

  ஆ...
ஹே சாயிராம் என் தெய்வமே வந்து நீ தானே தந்தது
எந்தன் கூடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
ஹே சாயிராம் என் தெய்வமே வந்து நீ தானே தந்தது
எந்தன் கூடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
  (Music)

என்றும் நீ தரும் தரும் எதனையும் போதும்
     ஆ
என்றே ஏன் மனம் சொல்லுமெப்போதும்
   ஆ...
என்றும் நீ தரும் எதனையும் போதும்
என்றே ஏன் மனம் சொல்லுமெப்போதும்
எனவே ஏற்றேன் உனைநான் நினைந்தே
எனவே ஏற்றேன் உனைநான் பணிந்தே
மருந்தாய் கொடுத்தாய் எனநான் நினைத்தேன்
மருந்தாய் கொடுத்தாய் எனநான் குடித்தேன்
ஹே சாயிராம் என் தெய்வமே வந்து நீ தானே தந்தது
எந்தன் கூடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
 (Music)

நஞ்சை சாயி  உன் கரம் தரும்போதும்
 ஆ..
நன்றென தாவென தானதை ஏற்கும்
  ஆ..
நஞ்சை சாயி  உன் கரம் தரும்போதும்
நன்றென தாவென தானதை ஏற்கும்
மனதை அருளாய் குருவே எனக்கும் (2)
உனைநான் சரணாய் அடையும் தருணம்
உயர்மெய்ப் பொருளாய் அதுதான் உதவும்
ஹே சாயிராம் என் தெய்வமே வந்து நீ தானே தந்தது
எந்தன் கூடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
இன்னும் வேண்டுமா என்றது

Tuesday, September 28, 2021

567. பார் மேடையில் தாய் ஜாடையில் (பூ மாலையில்)**

பார் மேடையில் தாய் ஜாடையில் அன்று யார் யார் யார் வந்தது
நம்மைத் தேடி தெய்வம் வந்தது சத்ய சாயிராம் தானது
பார் மேடையில் தாய் ஜாடையில் அன்று யார் யார் யார் வந்தது
நம்மைத் தேடி அன்பைத் தந்தது சத்ய சாயிராம் தானது
(MUSIC)

அன்னையைப் போலவர் கண்களில் பாசம் .. ஆ..ஆ..ஆ..ஆ
நண்பனைப் போலன்புத் தந்தையின் நேசம்.. ஆ..ஆ..ஆ..ஆ
அன்னையைப் போலவர் கண்களில் பாசம்
நண்பனைப் போலன்புத் தந்தையின் நேசம்
அதன்மேல் இனிமை உலகில் உளதோ (2)
நினைந்தே இருப்பேன் வரும் நாள் உலகில்
நினைந்தே இருந்தேன் இது நாள் வரையில்
பார் மேடையில் தாய் ஜாடையில் அன்று யார் யார் யார் வந்தது
நம்மைத் தேடி தெய்வம் வந்தது சத்ய சாயிராம் தானது
(MUSIC)

கொஞ்சும் குளிர் மழைச் சாரலைப் போலும்..ஆ..ஆ..ஆ..ஆ
சாயி பிரான் குரல் காதினுள் தூறும்..ஆ..ஆ..ஆ..ஆ
கொஞ்சும் குளிர் மழைச் சாரலைப் போலும்
சாயி பிரான் குரல் காதினுள் தூறும்
மனிதன் வடிவில் உலகில் அருளும்(2)
அன்பாய் இறைவா மீண்டும் வரணும் (2)
பார் மேடையில் தாய் ஜாடையில் அன்று யார் யார் யார் வந்தது
நம்மைத் தேடி தெய்வம் வந்தது சத்ய சாயிராம் தானது
எங்கள் சாயிராம் தானது

முதல்பக்கம்