Tuesday, September 28, 2021

567. பார் மேடையில் தாய் ஜாடையில் (பூ மாலையில்)**

பார் மேடையில் தாய் ஜாடையில் அன்று யார் யார் யார் வந்தது
நம்மைத் தேடி தெய்வம் வந்தது சத்ய சாயிராம் தானது
பார் மேடையில் தாய் ஜாடையில் அன்று யார் யார் யார் வந்தது
நம்மைத் தேடி அன்பைத் தந்தது சத்ய சாயிராம் தானது
(MUSIC)

அன்னையைப் போலவர் கண்களில் பாசம் .. ஆ..ஆ..ஆ..ஆ
நண்பனைப் போலன்புத் தந்தையின் நேசம்.. ஆ..ஆ..ஆ..ஆ
அன்னையைப் போலவர் கண்களில் பாசம்
நண்பனைப் போலன்புத் தந்தையின் நேசம்
அதன்மேல் இனிமை உலகில் உளதோ (2)
நினைந்தே இருப்பேன் வரும் நாள் உலகில்
நினைந்தே இருந்தேன் இது நாள் வரையில்
பார் மேடையில் தாய் ஜாடையில் அன்று யார் யார் யார் வந்தது
நம்மைத் தேடி தெய்வம் வந்தது சத்ய சாயிராம் தானது
(MUSIC)

கொஞ்சும் குளிர் மழைச் சாரலைப் போலும்..ஆ..ஆ..ஆ..ஆ
சாயி பிரான் குரல் காதினுள் தூறும்..ஆ..ஆ..ஆ..ஆ
கொஞ்சும் குளிர் மழைச் சாரலைப் போலும்
சாயி பிரான் குரல் காதினுள் தூறும்
மனிதன் வடிவில் உலகில் அருளும்(2)
அன்பாய் இறைவா மீண்டும் வரணும் (2)
பார் மேடையில் தாய் ஜாடையில் அன்று யார் யார் யார் வந்தது
நம்மைத் தேடி தெய்வம் வந்தது சத்ய சாயிராம் தானது
எங்கள் சாயிராம் தானது

முதல்பக்கம் 

No comments:

Post a Comment