Showing posts with label அன்புள்ள மான் விழியே. Show all posts
Showing posts with label அன்புள்ள மான் விழியே. Show all posts

Saturday, May 9, 2020

187. அன்புள்ள என் சாயிமா (அன்புள்ள மான் விழியே) **



அன்புள்ள என் சாயிமா ... பூமியில் நீ நடக்கும்
அந்த நாளுக்கு ஏங்குகிறேன்  .. தினம்நீ..வரப் பாடுகிறேன்
(MUSIC)
அன்புள்ளம் கொண்டவனே ... ஆசையை வென்றவனே
நான் பாடிடும் சாயிப் பண்ணால் ... உடன்-பாரினில்நீ வருவாய்
(MUSIC)
உருகிடும்-பாகே உன்-இதயம்
பெருகிடும்-அன்பே அதில்-உதயம்
(2)
இளகும்-நெஞ்சுடன் பூமி-வந்திடு
கொடுக்கும்-அன்புடன் வளைய-வந்திடு
வந்துகாட்டுஉன் கறுப்புப் பொன்முடி
தஞ்சம்-புகுந்திட வேண்டும்-தாய் மடி
அன்புள்ள என் சாயிமா .. பூமியில் நீ நடக்கும்
அந்த நாளுக்கு ஏங்குகிறேன் .. தினம்நீ..வரப் பாடுகிறேன்
(MUSIC)
நலம்தருமுன்திரு நாமமொன்றே
அருள்தரும் -உன்திருப் பாதம்நன்றே
(2)
விரைந்துவந்திடு ஆட்சிசெய்திடு 
நடந்துவந்திடு காட்சி தந்திடு
(2)
உந்தன் பொன்னடி பணிய வேண்டுது
எங்கள்நெஞ்சுனை நினைத்துஏங்குது

அன்புள்ள என் சாயிமா
நான் எழுதிடும் சாயி கீதம் 
அதைக் கைகளில் எழுதவில்லை
என்கண்ணீரில் எழுதிவந்தேன்