Showing posts with label நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு. Show all posts
Showing posts with label நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு. Show all posts

Friday, August 27, 2021

562. அன்பைக் கொண்டு(நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு) **

ஹேய்  ..
அன்பைக் கொண்டு மண்ணில்-வந்த எங்கள் ஸ்வாமி
கொண்டு வந்த அன்பைத் தந்த எங்கள் சாயி
(2)
அன்பே என்று சொல்லி -அன்பைத் தந்த சாயி (2)
நீ ஆயி அப்பன் மற்றும் குரு தெய்வம் ஸ்வாமி
பே...ரன்பைக் கொண்டு மண்ணில் வந்த எங்கள் ஸ்வாமி
கொண்டு வந்த அன்பைத் தந்த எங்கள் சாயி
(Music)
உதட்டினில் சாயீ நாமம் இருக்கு
இரு கரங்களில் சேவை என்றும் இருக்கு
(2)
என்றிருக்கும் தொண்டர்-நலன் என் பொறுப்பு (2)
எனும் உந்தன்-மொழி ஒன்றுதான் துணை எனக்கு
பே...ரன்பைக் கொண்டு மண்ணில் வந்த எங்கள் ஸ்வாமி
கொண்டு வந்த அன்பைத் தந்த எங்கள் சாயி
(Music)
எல்லார்க்கும் ஆயி-அப்பன் போல்-உறவு
-நீ
அன்பைச் சொரிவதில் அருவியைப் போலிருக்கும்-நீ
(2)
பொல்லாத மனதையும் மாற்றியமைக்கும் (2)
உன்னைச் சாமி எனவே இந்த பூமி துதிக்கும்
பே...ரன்பைக் கொண்டு மண்ணில் வந்த எங்கள் ஸ்வாமி
கொண்டு வந்த அன்பைத் தந்த எங்கள் சாயி
(Music)
ஹா..
(Music)
உந்தன் கண்கள் தந்த அன்பு போதும்-எனக்கு
ஐயே உந்தன்-திரு..வாக்கே-என்றும் வேதம் எனக்கு
(2)
தொண்டில் அன்பில் தெய்வம்-உண்டு என்ற உனக்கு (2)
இணை என்று ஒரு தெய்வம்-எங்கு எங்கே இருக்கு
பே...ரன்பைக் கொண்டு மண்ணில் வந்த எங்கள் ஸ்வாமி
கொண்டு வந்த அன்பைத் தந்த எங்கள் சாயி
அன்பே என்று சொல்லி அன்பைத் தந்த சாயி
நீ ஆயி அப்பன் மற்றும் குரு தெய்வம் ஸ்வாமி
பே...ரன்பைக் கொண்டு மண்ணில் வந்த எங்கள் ஸ்வாமி
கொண்டு வந்த அன்பைத் தந்த எங்கள் சாயி

 சாயி கீதம்-6

முதல்பக்கம்