Showing posts with label ஆட்டுவித்தால் யாரொருவர். Show all posts
Showing posts with label ஆட்டுவித்தால் யாரொருவர். Show all posts

Friday, May 29, 2020

342. கேட்டுக்கொண்டா அவதரித்தாய்(ஆட்டுவித்தால் யாரொருவர்) **

கேட்டுக்கொண்டா அவதரித்தாய் அதனாலேயா பாபா 
கேட்காமல் சென்று விட்டாய்  அதுவும் சரிதான் பாபா
(2) 
உன்கணக்கில் என்றைக்குமே நியாயம் உண்டு (2)
அது தெரிந்தும் கூடக் கொல்லுதென்னை சோகம் வந்து
இகஉலகம் வெறுத்தே சென்றாய் நீயும் தானே 
ஆனால் எங்களைஏன் தவிக்க விட்டுப் போனாய் தாயே
எங்களைஏன் தவிக்க விட்டுப் போனாய் தாயே
  கேட்டுக்கொண்டா அவதரித்தாய் அதனாலேயா பாபா 
கேட்காமல் சென்று விட்டாய்  அதுவும் சரிதான் பாபா
(MUSIC)
பிஞ்சாகும் சிறுவயதில் சேவை செய்தாய் 
உந்தன் பாட்டனுக்கே சோறூட்டும் தாயும் ஆனாய்
வானிருக்கும் தேவர் தன்னின் மன்னன் நீயே 
எனினும் மண்ணில் வந்து துன்பம்-தாங்கி சேவை-செய்தாய்
மண்ணில்-வந்து துன்பம்-தாங்கி சேவை செய்தாய்
கேட்டுக்கொண்டா அவதரித்தாய் அதனாலேயா பாபா 
கேட்காமல் சென்று விட்டாய்  அதுவும் சரிதான் பாபா
(MUSIC)
யார்துயரைக் கண்டாலும் பொறுக்க மாட்டாய்
பிறர் உனைச்சிறுமை செய்தாலும் வெறுக்க மாட்டாய்
உன்னிடத்தே உள்ளதெல்லாம் அன்பே பாபா 
அதை உனக்கு-அல்ல பிறருக்கென்றே கொண்டாய் பாபா
உனக்கு-அல்ல பிறருக்கென்றே கொண்டாய் பாபா
 கேட்டுக்கொண்டா அவதரித்தாய் அதனாலேயா பாபா 
கேட்காமல் சென்று விட்டாய்  அதுவும் சரிதான் பாபா 

Thursday, May 4, 2017

506. காட்சி தந்தாய் மகிழ்ச்சி தந்தாய் (ஆட்டுவித்தால் யாரொருவர்)

காட்சி- தந்தாய் மகிழ்வளித்தாய் தினம்-நடந்..தே-நீ சாயி
கண்ணிமைக்கும் வேளையிலே மறைந்தாயே-நீ தாயே
(1+SM+1)
நான் உன்னை த்யானமதில் தினமும்-கண்டு (2)
பே..ரெழுச்சி-பெரும் ஞானமது இல்லா-மண்டு
பலனிலையே உயர்வும்-இல்லை உலகினாலே 
அது சாயி-எனும் அன்பு-இல்லை என்னும்போதே
சாயி-எனும் அன்பு-இல்லை என்னும்போதே
காட்சி தந்தாய்  மகிழ்வளித்தாய் தினம் நடந்தே-நீ சாயி
கண்ணிமைக்கும் வேளையிலே மறைந்தா..யே-நீ தாயே
(MUSIC)
ஹே-சாயி உன்-வழியில் நானா வந்தேன்
அன்று பார்த்தவுடன் என்-விழியில் நீதான் வந்தாய் 
வாழ்ந்திருந்தேன் உலகம்-தன்னை உண்மை-என்றே 
உன்னால் உண்மை-தன்னை உணரும் ஆவல் தன்னைக் கொண்டேன்
உன்னருகே இருக்கும்-ஆவல் தன்னைக் கொண்டேன்
காட்சி தந்தாய் மகிழ்வளித்தாய் தினம் நடந்தே-நீ சாயி
கண்ணிமைக்கும் வேளையிலே மறைந்தாயே நீ தாயே
(MUSIC)
கண்டதுமே அமைதி-தரும் ஸ்வா..மி எங்கே      
என் கண்ணெதிரே விருந்தளிக்கும் சாயி எங்கே
உன்-பதமே தாய்-மடி..யாய்-நான் கொண்டேன் பாபா  
இதை அறிந்திருந்தும் என்னை-விட்டேன் போனாய் பாபா
அறிந்திருந்தும் உலகை-விட்டேன் போனாய் பாபா
காட்சி தந்தாய் மகிழ்வளித்தாய் தினம் நடந்தே-நீ சாயி
கண்ணிமைக்கும் வேளையிலே மறைந்தாயே நீ தாயே

English Translation

Hey SAI, You walked in front of us daily giving your divine darshan
You left us swiftly in a wink of an eye
I don’t have the capability to see you in Dhyaana
I also do not see any value in this world without you and your love

Hey Sai, did I come in your way, you only entered my heart and keep standing in my eyes
I was living in this world thinking that it is real
Only by your grace I got the intent to search for the truth
I had the urge to stay by your side

Where is my Swamy who confers peace with a mere glance.
Where is the SAI who is a feast to my eyes
I have always look up to your feet as my mother’s lap
Knowing this well, how can you leave me and go Baba
Knowlingly , why have you left this world Baba…!