Friday, May 29, 2020

342. கேட்டுக்கொண்டா அவதரித்தாய்(ஆட்டுவித்தால் யாரொருவர்) **

கேட்டுக்கொண்டா அவதரித்தாய் அதனாலேயா பாபா 
கேட்காமல் சென்று விட்டாய்  அதுவும் சரிதான் பாபா
(2) 
உன்கணக்கில் என்றைக்குமே நியாயம் உண்டு (2)
அது தெரிந்தும் கூடக் கொல்லுதென்னை சோகம் வந்து
இகஉலகம் வெறுத்தே சென்றாய் நீயும் தானே 
ஆனால் எங்களைஏன் தவிக்க விட்டுப் போனாய் தாயே
எங்களைஏன் தவிக்க விட்டுப் போனாய் தாயே
  கேட்டுக்கொண்டா அவதரித்தாய் அதனாலேயா பாபா 
கேட்காமல் சென்று விட்டாய்  அதுவும் சரிதான் பாபா
(MUSIC)
பிஞ்சாகும் சிறுவயதில் சேவை செய்தாய் 
உந்தன் பாட்டனுக்கே சோறூட்டும் தாயும் ஆனாய்
வானிருக்கும் தேவர் தன்னின் மன்னன் நீயே 
எனினும் மண்ணில் வந்து துன்பம்-தாங்கி சேவை-செய்தாய்
மண்ணில்-வந்து துன்பம்-தாங்கி சேவை செய்தாய்
கேட்டுக்கொண்டா அவதரித்தாய் அதனாலேயா பாபா 
கேட்காமல் சென்று விட்டாய்  அதுவும் சரிதான் பாபா
(MUSIC)
யார்துயரைக் கண்டாலும் பொறுக்க மாட்டாய்
பிறர் உனைச்சிறுமை செய்தாலும் வெறுக்க மாட்டாய்
உன்னிடத்தே உள்ளதெல்லாம் அன்பே பாபா 
அதை உனக்கு-அல்ல பிறருக்கென்றே கொண்டாய் பாபா
உனக்கு-அல்ல பிறருக்கென்றே கொண்டாய் பாபா
 கேட்டுக்கொண்டா அவதரித்தாய் அதனாலேயா பாபா 
கேட்காமல் சென்று விட்டாய்  அதுவும் சரிதான் பாபா 

No comments:

Post a Comment