Showing posts with label கண்ணெதிரே தோன்றினாள். Show all posts
Showing posts with label கண்ணெதிரே தோன்றினாள். Show all posts

Saturday, May 30, 2020

357. உந்தன் முகமே(முத்து நகையே உன்னை நான் அறிவேன்) **

உந்தன் முகமே சாயி எங்கு-ஐயா ஆஹா...ஆஹா
உந்தன்-பதமே சாயி எங்கு ஐயா
சோகம் போதுமைய்யா 
(MUSIC)
உந்தன் முகமே சாயி எங்கு-ஐயா ஐயா ஐயா 
உந்தன்-பதமே சாயி எங்கு ஐய்யா
மீண்டும் வந்திடைய்யா 
(MUSIC)
உலவும் உந்தன் அன்பின் ரூபம் எந்தன் கண்கள் என்று காணுமோ
பிரிவில் வாடும் நெஞ்சம் களித்து இன்பம்கொண்டு என்றுவாழுமோ
உந்தன் முகமே சாயி எங்கு-ஐய்யா ஆஹா...ஆஹா
(MUSIC)
அன்பை அள்ளித் தேனாய் நீ கொடுத்தாய் 
மல்லிகையின் பூவில் பேர் தொடுத்தாய் 
நன் மனங்கள் வாழ அருள் கொடுத்தாய் 
இதுதான் வாழ்வெனச் சொல்லிக்கொடுத்தாய்
உந்தன் முகமே சாயி எங்கு-ஐய்யா ஆஹா...ஆஹா
உந்தன்-பதமே சாயி எங்கு ஐயா
மீண்டும் வந்திடையா
(MUSIC)
கண்ணிருக்கும் உன்தாய் அன்பினுக்கு 
எங்கிருக்கு ஏதிருக்கு ஈடதற்கு
ஏன் விரைந்து சென்றாய் 
(SM)
ஏன் விரைந்து சென்றாய் நீ விண்ணுக்கு
யாருக்குப் புரியும் உன்கணக்கு 
(SM)
உந்தன் முகமே சாயி எங்கு-ஐய்யா ஆஹா...ஆஹா
உந்தன்-பதமே சாயி எங்கு ஐய்யா
 மீண்டும் வந்திடையா

Monday, May 8, 2017

356. அன்புருவாய்த் தோன்றினான்(கண்ணெதிரே தோன்றினாள்) ***

அன்புருவாய்த் தோன்றினான்  அதைஉலகில் காட்டினான்
தீயவரை மாற்றினான் சாயி நமைக் காப்பாற்றினான்
அன்புருவாய்த் தோன்றினான்  அதைஉலகில் காட்டினான்
தீயவரை மாற்றினான் சாயி நமைக் காப்பாற்றினான்
ச்சு ..ச்சு..ச்சு.ச்சு..ச்சு   
அன்புருவே சாயிராம் 
(MUSIC)
பாசம் வழிந்தோடும் பார்வையும் அன்புச்சிரிப்புடனே தேன்போன்ற வார்த்தையும்
பாசம் வழிந்தோடும் பார்வையும் அன்புச்சிரிப்புடனே தேன்போன்ற வார்த்தையும்
நொந்திருப்போர் துயர்களுக்குத் தீர்வையும்
நொந்திருப்போர் துயர்களுக்குத் தீர்வையும்
நெற்றி மின்னலிட்ட பிறை சூடன் அம்சமும் கொண்டு வந்த
அன்புருவாய்த் தோன்றினான்  அதைஉலகில் காட்டினான்
தீயவரை மாற்றினான் சாயி நமைக் காப்பாற்றினான்   
ச்சு ..ச்சு..ச்சு.ச்சு..ச்சு   
அன்புருவே சாயிராம்
  (MUSIC)
மண்ணில் மறுபடியும் வருகிறேன் 
என்று சொன்ன-சொல்லை தினம்-நினைத்து வாழுவோம் 
மண்ணில் மறுபடியும் வருகிறேன் 
என்று சொன்ன-சொல்லை தினம்-நினைந்து மகிழுவோம்

  என்றுமவன் சத்ய வாக்கைத் தந்திடும் ராமன் 
  என்றுமவன் தந்த வாக்கைக் காத்திடும் ராமன் 
அன்பு சேவை மற்றும் சாயி கீதம் தனில் மகிழ் சாயி ராமன்
அன்புருவாய்த் தோன்றினான்  அதைஉலகில் காட்டினான்
தீயவரை மாற்றினான் சாயி நமைக் காப்பாற்றினான் 
ச்சு ..ச்சு..ச்சு.ச்சு..ச்சு   
அன்புருவே சாயிராம்