Showing posts with label மெழுகுவர்த்தி எரிகின்றது. Show all posts
Showing posts with label மெழுகுவர்த்தி எரிகின்றது. Show all posts

Monday, September 26, 2022

599.மெழுகு நெஞ்சு என்றானது(மெழுகுவர்த்தி எரிகின்றது) **

மெழுகு நெஞ்சு என்றானது அவதாரம் நிகழ்கின்றது 

(SM)

மெழுகு நெஞ்சு என்றானது அவதாரம் நிகழ்கின்றது

அன்பு பாதை என்றானது சாம்ராஜ்யம் நடக்கின்றது (2)

அது ப்ரேமை கடலானது  

நம் சாயி ராம் தானது 

மெழுகு நெஞ்சு என்றானது அவதாரம் நிகழ்கின்றது 

(MUSIC)

அன்பு என்னும் பெயரைக்கொண்டதே ப்ரேமை ரூபம் தன்னை கொண்டதே (2)

உள்ளம் தன்னில் நம்மைக் கொண்டது 

நமக்குச் சேவை செய்து நின்றது 

நமக்குச் சேவை சொல்லித் தந்தது

மெழுகு நெஞ்சு என்றானது அவதாரம் நிகழ்கின்றது 

(MUSIC)

தாயின் நெஞ்சம்  தானும் கொண்டதே பாசம்தன்னை அள்ளித் தந்ததே (2)

தர்மம் மனித உருவம் கொண்டது சாயி என்று பேரைக் கொண்டது 

நம்மை எண்ணி மண்ணில் வந்தது

மெழுகு நெஞ்சு என்றானது அவதாரம் நிகழ்கின்றது 

அன்பு பாதை என்றானது சாம்ராஜ்யம் நடக்கின்றது

அது ப்ரேமை கடலானது  

நம் சாயி ராம் தானது 

மெழுகு நெஞ்சு என்றானது அவதாரம் நிகழ்கின்றது

சாயி கீதம்-6

முதல்பக்கம்

Thursday, May 11, 2017

337. மனது பற்றி எரிகின்றது(மெழுகுவர்த்தி எரிகின்றது) ***

மனது-பற்றி எரிகின்றது என்றாலும் என்-செய்வது  (1+sm+1)
அதுவும்-நைந்து அழுகின்றது முடியாமல் அழுகின்றது (2)
அது-ஏக்கம் கொள்கின்றது சாயீசன் முகம்-தேடுது
மனது-பற்றி எரிகின்றது என்றாலும் என்-செய்வது  
(MUSIC)
இறைவன்பேரை நாவில்சொல்லடா அன்புசேவை கையில்கொள்ளடா (2)
என்று சொன்ன சாயி யாரடா 
மண்ணில் மெய்யில் வந்த மெய்யடா (2)
மனது-பற்றி எரிகின்றது என்றாலும் என்-செய்வது  
(MUSIC)
சாயிஅன்பில் அன்னைதானடா மண்ணில் அன்பு கொண்டபேரடா (2) 
உருவம் கொண்டு வந்த தேனடா 
அருவமென்று பறந்ததேனடா (2)
மனது-பற்றி எரிகின்றது என்றாலும் என்-செய்வது
அதுவும்-நைந்து அழுகின்றது முடியாமல் அழுகின்றது அது ஏக்கம் கொள்கின்றது சாயீசன் முகம்-தேடுது
மனது-பற்றி எரிகின்றது என்றாலும் என்-செய்வது