Showing posts with label உனக்காக எல்லாம் உனக்காக. Show all posts
Showing posts with label உனக்காக எல்லாம் உனக்காக. Show all posts

Sunday, May 31, 2020

499. நமக்காக சாயி அழகாக (உனக்காக எல்லாம் உனக்காக)

நமக்காக சாயி அழகாக

நமக்காக சாயி அழகாக

கையில் சேவையும்-நாவில் பேரையும்-கொள்வீர் என்றாரே

(2)

(MUSIC)

அளித்தானே  சாயி அளித்தானே-மக்கள்

துயரம்-போக அருள்திருநீ..றளித்தானே

ஏமிரா பங்காரு என்று அழைத்தே கொடுத்தானே (2)  

அன்பை பேதமில்லாமல் எல்லருக்குமவன் கொடுத்தானே

நமக்காக சாயி அழகாக

நமக்காக சாயி அழகாக

கையில் சேவையும்-நாவில் பேரையும்-கொள்வீர் என்றாரே

(MUSIC)

பள்ளிக்கல்வி தந்தான் அன்புசொல்லித் தந்தான் சாயிபிரான்

மக்கள் நோய்கள் போக்க மருந்தகத்தை அவன் கொடுத்தான்

(1+SM+1)

கங்கையென அவன் தண்ணீரையே பெருக்கித் தந்தான் (1+SM+1)

ஒரு துயர் வராமல் காத்திடும்தாய்  நம்-பெருமான்

நமக்காக சாயி அழகாக

நமக்காக சாயி அழகாக

கையில் சேவையும்-நாவில் பேரையும்-கொள்வீர் என்றாரே

(MUSIC)

உனக்கு-மட்டும் எனக்கு-மட்டும் இல்லை-அவன் உலகெலாம்

அருளினைச் சமுத்திரமாய் அன்பே என்றே தந்திடுவான்

வேறொ..ருத்தர்-இங்கு சாயி-அன்பைத் தர யாரிருக்கார் (1+SM+1)

யாரும் கேக்காமலே யார் சாயி போல வந்து அருள் தருவார்

நமக்காக சாயி அழகாக

நமக்காக சாயி அழகாக

கையில் சேவையும்-நாவில் பேரையும்-கொள்வீர் என்றாரே

(2)