Showing posts with label மயக்கமா கலக்கமா. Show all posts
Showing posts with label மயக்கமா கலக்கமா. Show all posts

Sunday, February 13, 2022

582.இணக்கமாய் அணுக்கமாய்(மயக்கமா கலக்கமா) **

 
இணக்கமாய் அணுக்கமாய் மனதிலே இதமுமாய்
வாழ்க்கையில் சாயிராம்
இணக்கமாய் அணுக்கமாய் மனதிலே இதமுமாய்
யார்க்குமே சாயிராம்
(MUSIC)

யார்க்கும் அன்பாய் ப்ரேமையை வழங்கும் 
தாய்க்கும் ;மேலாய் பாசத்தைப் பொழியும்
யார்க்கும் அன்பாய் ப்ரேமையை வழங்கும் 
தாய்க்கும் ;மேலாய் பாசத்தைப் பொழியும்
நண்பன் என்றாய் தோளினைக் கொடுக்கும் சாயிராம் போல் வேறெதும் இல்லை 
சாயிராம் தான் ப்ரேமையின் எல்லை 
சாயிராம் உன் இதயம் புகுந்தால் கெடுதி விலகும் அமைதி விளங்கும்
இணக்கமாய் அணுக்கமாய் மனதிலே இதமுமாய்
யார்க்குமே சாயிராம்
(MUSIC)

ஏழை எளியோர் பாந்தவன் சாயி இறைஞ்சும் எவர்க்கும் ஸ்வாமியும் சாயி (2)
நாளும் பொழுதும் அருகினில் இருந்து எவர்க்கும் ப்ரேமை அளித்திடும் சாயி
எவர்க்கும் ப்ரேமை அளித்திடும் சாயி
உனக்கும் சாயி எனக்கும் சாயி நினைத்துப் பார்க்கும் எவர்க்கும் சாயி
இணக்கமாய் அணுக்கமாய் மனதிலே இதமுமாய்
வாழ்க்கையில் சாயிராம்
இணக்கமாய் அணுக்கமாய் மனதிலே இதமுமாய்
யார்க்குமே சாயிராம்





Saturday, April 29, 2017

92. இறங்கிவா விரைந்துவா ( மயக்கமா கலக்கமா )***




இறங்கிவா விரைந்துவா மனதிலே ஒளியைத்தா
அன்னைநீ   சாயிராம்
(2)
(Music)
யாக்கை கொண்டாய் உலகினில் இருந்தாய்
போக்கிஎடுத்தாய் வேதனை நன்றாய்
(2)
வந்தயுகங்கள் ஆயிரம்தனிலும் ஓடிவந்தாய் துயரங்கள் துடைத்தாய்
ஓடிவந்தாய் துயரங்கள் துடைத்தாய்
எங்களைஅணைக்கும் அன்னையாய்-இருந்தாய்
அமைதிகொடுக்கும் எங்களின்தந்தாய்
இறங்கிவா விரைந்துவா மனதிலே ஒளியைத்தா
அன்னைநீ   சாயிராம்
(Music)
ஏழைஎளிய மக்களும்வருவார் இரவும்பகலும் உன்னடிநாடி(2)
நாளைவேளை என்றுசொல்லாமல் படுத்தும்துயரைத் துடைப்பவன் நீயே
படுத்தும்துயரைத் துடைப்பவன் நீயே
உனக்கும்மேலே வேறெவர் சாயி
அணைத்துக்-காக்கும் கருணையின் தாயே
இறங்கிவா விரைந்துவா மனதிலே ஒளியைத்தா
அன்னைநீ   சாயிராம்

(2)