Showing posts with label தண்ணிலவு தேனிறைக்க. Show all posts
Showing posts with label தண்ணிலவு தேனிறைக்க. Show all posts

Wednesday, May 6, 2020

113. கண்ணிலருள் இதம் கொடுக்க (தண்ணிலவு தேனிறைக்க) **

கண்ணிலருள்..ளிதம் கொடுக்க
மண்ணில்-சதம் பதம்கொடுக்க (Short Music)
(2)
சாயி பிரான் அவதரித்து வந்தான்
வாடும் மனங்களிலே துயர்கள்தன்னைத் தீர்த்தான்
துயர்கள் தீர்த்தான்..!
கண்ணிலருள்..ளிதம் கொடுக்க
மண்ணில்-சதம் பதம்கொடுக்க
சாயி பிரான் அவதரித்து வந்தான்
வாடும் மனங்களிலே துயர்கள்தன்னைத் தீர்த்தான்
 (SHORT MUSIC)
நெஞ்சிலன்பு அலைஎழும்ப தஞ்சமடி வழங்கிநிற்க(2)
காவியங்கி தரைதவழ வந்தான்
பொங்கும் அன்பிலுள்ளம் அவன்கனிந்து நின்றான்
கனிந்து நின்றான்...!
கண்ணிலருள்..ளிதம் கொடுக்க
மண்ணில்-சதம் பதம்கொடுக்க
சாயி பிரான் அவதரித்து வந்தான்
வாடும் மனங்களிலே துயர்கள்தன்னைத் தீர்த்தான்
 (SHORT MUSIC)
விண்ணளந்த வாமனனே மண்ணில்வந்த நாரணனே (2)
 மானிடத்தின் உடலுடனே வந்தான்
அவன் சாயிஎன்ற திருப்பெயரைக் கொண்டான் 
பெயரைக் கொண்டான்

கண்ணிலருள் இதம் கொடுக்க
மண்ணில்-சதம் பதம்கொடுக்க
சாயி பிரான் அவதரித்து வந்தான்
வாடும் மனங்களிலே துயர்கள்தன்னைத் தீர்த்தான்
ஆஹாஹாஹா.. ஆஹாஹஹா .. 
ஓஹோஹோஹோ.. ஓஹோஹோஹோ.. ஓஹோஹோஹோ
 (SHORT MUSIC)
பட்டுக்கரும் குழல்கவிழ பக்தர்களின் மனம்மகிழ (2)
தரி..சனத்தை தினம்வழங்கி வந்தான்
அரி..யாசனத்தை எம்மனதில் கொண்டான்
இன்று கொண்டான்..!

கண்ணிலருள் இதம் கொடுக்க
மண்ணில்-சதம் பதம்கொடுக்க
சாயி பிரான் அவதரித்து வந்தான்
வாடும் மனங்களிலே துயர்கள்தன்னைத் தீர்த்தான்
துயர்கள் தீர்த்தான்..!