Showing posts with label சொந்தம் எப்போதும். Show all posts
Showing posts with label சொந்தம் எப்போதும். Show all posts

Sunday, May 31, 2020

443. சாய்ராம் வாழ்வென்றும்(சொந்தம் எப்போதும்) **

சாய்ராம் வாழ்வென்றும் ஒரு-புதிர்-தான் எளிதாய்ப் புரியாதது (2)

அன்பால் எல்லோரின் வாழ்வை இணைக்கும் புதிரும் புதியது (2)

அன்பை எல்லோர்க்கும் எளிதில் வழங்கும் எளிய புதிர்தானது

சாய்ராம் வாழ்வென்றும் ஒரு-புதிர்-தான் எளிதாய்ப் புரியாதது

(MUSIC)

விளங்கிக்-கொள்ளா தொன்றாய்-இல்லை தெய்வம்-வான்-நின்று(2)

விளங்கிக்கொள்ளச் சொன்னான்-நாமும் தெய்வம் தான்-என்று(2)

இது என்ன புரிந்திடும் புதிரோ

திரு விளையாட்டெனும் சதிரோ

(BOTH)

என்றாலும் பேரை அவன்-தந்த சேவை

சொன்னாலும் செய்தாலும் விளங்காதோ

சாய்ராம் வாழ்வென்றும் ஒரு-புதிர்-தான் எளிதாய்ப் புரியாதது

(MUSIC) + ஆ..ஓ.. +(MUSIC)

கணத்தில்மறையும் குமிழாம்-வாழ்க்கை தன்னில்-சாயிவர (2)

மனத்தில்-நிறையும் அன்பால்-இன்பம் கோடி-கோடி தர (2)

புதிரல்லப்-புதியதுமல்ல மந்திரம் மாயமுமல்ல

என்றே-நம்மனதில் சாயீசனருளில் ப்ரஞானப்ரம்மமும் விளங்காதோ

சாய்ராம் வாழ்வென்றும் ஒரு-புதிர்-தான் எளிதாய்ப் புரியாதது

 எளிதாய்ப் புரியாதது (2)

Wednesday, May 3, 2017

244. சிரித்தே எப்போதும் (சொந்தம் எப்போதும்)

வந்தே-எப்போதும் அருள்புரியும் இறைதான் சாயானது (2)
எங்கே என்றேநாம் தேடி-அலையும்  தேவை இலாமலே (2)
நம்மைத்-தன்னோடு சேர்த்து-கொள்ள என்றும்-அருகிருப்பது
     வந்தே எப்போதும் அருள்புரியும் இறைதான் சாயானது
(MUSIC)
தினமும்-தரிசனம் கொடுக்கும்-முகத்தை பாரினில்நாம்காண (2)
மெல்லிய-கரமும் திருநீறளிக்கும் கோலத்தை-பார்காண (2)
விரைவினில் வருவாய் சாய்ராம்
அருளினைத் தருவாய் சாய்ராம்
 தினம்தந்து சிவக்கும் என்தாயுன் கரத்தை 
காட்டாமல்-நடிப்பது  சரிதானோ
(both)
வந்தே எப்போதும் அருள்புரியும் இறைதான் சாயானது
(MUSIC) 
ஆ.ஆ.ஆ.. ஒ..        
நிலத்தில்தவழும் தேர்போல்-நடையில் காட்சி நீயும்தர 
(Short music)
நிலத்தில்தவழும் தேர்போல்-நடையில் காட்சி நீயும்தர 
ஏங்கும்-நெஞ்சத் துயரில்வாடி சேய்களும் பாடிவர (2)
நடந்திடு மண்ணில் மெல்ல
உன்னருள் மொழிகள் சொல்ல
 உன்உள்ளம் பிறக்கும் கண்ணின்று வழியும்
அன்பென்னும் அமுதமும் கிடைக்காதோ
வந்தே எப்போதும் அருள்புரியும் இறைதான் சாயானது
(BOTH)