Sunday, May 31, 2020

443. சாய்ராம் வாழ்வென்றும்(சொந்தம் எப்போதும்) **




சாய்ராம் வாழ்வென்றும் ஒரு-புதிர்-தான் எளிதாய்ப் புரியாதது (2)

அன்பால் எல்லோரின் வாழ்வை இணைக்கும் புதிரும் புதியது (2)

அன்பை எல்லோர்க்கும் எளிதில் வழங்கும் எளிய புதிர்தானது

சாய்ராம் வாழ்வென்றும் ஒரு-புதிர்-தான் எளிதாய்ப் புரியாதது

(MUSIC)

விளங்கிக்-கொள்ளா தொன்றாய்-இல்லை தெய்வம்-வான்-நின்று(2)

விளங்கிக்கொள்ளச் சொன்னான்-நாமும் தெய்வம் தான்-என்று(2)

இது என்ன புரிந்திடும் புதிரோ

திரு விளையாட்டெனும் சதிரோ

(BOTH)

என்றாலும் பேரை அவன்-தந்த சேவை

சொன்னாலும் செய்தாலும் விளங்காதோ

சாய்ராம் வாழ்வென்றும் ஒரு-புதிர்-தான் எளிதாய்ப் புரியாதது

(MUSIC) + ஆ..ஓ.. +(MUSIC)

கணத்தில்மறையும் குமிழாம்-வாழ்க்கை தன்னில்-சாயிவர (2)

மனத்தில்-நிறையும் அன்பால்-இன்பம் கோடி-கோடி தர (2)

புதிரல்லப்-புதியதுமல்ல மந்திரம் மாயமுமல்ல

என்றே-நம்மனதில் சாயீசனருளில் ப்ரஞானப்ரம்மமும் விளங்காதோ

சாய்ராம் வாழ்வென்றும் ஒரு-புதிர்-தான் எளிதாய்ப் புரியாதது

 எளிதாய்ப் புரியாதது (2)



No comments:

Post a Comment