Wednesday, March 1, 2023

609.ஹே சாயிராம் என் தெய்வமே(பூ மாலையில் ஓர் மல்லிகை)**

  ஆ...
ஹே சாயிராம் என் தெய்வமே வந்து நீ தானே தந்தது
எந்தன் கூடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
ஹே சாயிராம் என் தெய்வமே வந்து நீ தானே தந்தது
எந்தன் கூடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
  (Music)

என்றும் நீ தரும் ஆசியைப் போதும்
     ஆ
என்றே ஏன் மனம் சொல்லுமெப்போதும்
   ஆ...
என்றும் நீ தரும் ஆசியைப் போதும்
என்றே ஏன் மனம் சொல்லுமெப்போதும்
எனவே ஏற்றேன் உனைநான் நினைந்தே  (2)
மருந்தாய் கொடுத்தாய் எனநான் நினைத்தேன்
மருந்தாய் கொடுத்தாய் எனநான் குடித்தேன்
ஹே சாயிராம் என் தெய்வமே வந்து நீ தானே தந்தது
எந்தன் கூடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
 (Music)

நஞ்சை சாயி  உன் கரம் தரும்போதும்
 ஆ..
நன்றென தாவென தானதை ஏற்கும்
  ஆ..
நஞ்சை சாயி  உன் கரம் தரும்போதும்
நன்றென தாவென தானதை ஏற்கும்
மனதை அருளாய் குருவே எனக்கும் (2)
உனைநான் சரணாய் அடையும் தருணம்
உயர்மெய்ப் பொருளாய் அதுதான் உதவும்
ஹே சாயிராம் என் தெய்வமே வந்து நீ தானே தந்தது
எந்தன் கூடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
இன்னும் வேண்டுமா என்றது

No comments:

Post a Comment