Friday, February 18, 2022

587.அனுதினம் கிடைத்த தரிசனத்தை(மதுரையில் பறந்த மீன் கொடியை) ***

அனுதினம் கிடைத்த தரிசனத்தை என் பாட்டினில் சொல்வேனே
பாரில் கருணையைப் பொழிந்த சாயிபிரானின் அன்பினைச் சொல்வேனே
(SM)

அமுதினைப் பழித்த தேன் மொழியை நான் எப்படிச் சொல்வேனே (2)
இவை யாவும் அன்பால் நேர்ந்த ஒன்றாய் கொண்டது நம் பேறே
மண் பால்  கொண்டது நம் பேறே 
அனுதினம் கிடைத்த தரிசனத்தை என் பாட்டினில் சொல்வேனே
பாரில் கருணையைப் பொழிந்த சாயிபிரானின் அன்பினைச் சொல்வேனே
(MUSIC)

சாந்தி நிலையம் கோவில் என்றால் சாயிபிரான் நம் தெய்வமன்றோ..ஓ ..ஓ 
சாந்தி நிலையம் கோவில் என்றால் சாயிபிரான் நம் தெய்வமன்றோ..
கிடைத்த நல் பேறாய் யாரினி தருவார் பாரினிலே வேறாருளரோ 
வேதத்தில் உறையும் உண்மைகள் எல்லாம் திரண்டதுவாய் பேர் கொண்டதுவோ 
சோர்ந்த பொழுதில் அன்பு கொடுத்து அணைத்திடவே வேறாருளரோ 
அணைத்திடவே வேறாருளரோ
அனுதினம் கிடைத்த தரிசனத்தை என் பாட்டினில் சொல்வேனே
பாரில் கருணையைப் பொழிந்த சாயிபிரானின் அன்பினைச் சொல்வேனே
(MUSIC)

பர்த்திபுரியில் உறைந்திடும் தெய்வம் எளிதினிலே நேர் தோன்றியதோ 
விழியில் வழியும் ப்ரேமை நதியின் அலையோசை மேல் யாழ் இனிதோ
தேவைகள் எதுவும் கணத்தினில் நிறையும் சந்நிதிதான் நம் இடையுளதோ
திணறிடும் பாசம் பொழிந்திடும் நேசம் உதிக்குமிடம் போல் வேறுளதோ
இவை யாவும் அன்பால் நேர்ந்த ஒன்றாய் கொண்டது நம் பேறே
அனுதினம் கிடைத்த தரிசனத்தை என் பாட்டினில் சொல்வேனே
பாரில் கருணையைப் பொழிந்த சாயிபிரானின் அன்பினைச் சொல்வேனே

சாயி கீதம்-6

முதல்பக்கம்

No comments:

Post a Comment