Saturday, May 30, 2020

434. செஞ்சுருட்டிக் குரலில் ஏமி(ஜின்ஜினுக்கான் சின்னக் கிளி) **



சாயிராமசாயிராம சாயிராமசாயிராமசாயிராமசாயிராம சாயிராமராம்  
செஞ்சுருட்டிக் குரலில்-ஏமி என்று-கொஞ்சி நம்ம-ஸ்வாமி 
அன்பக்-கொட்டி ஆட்சி-செஞ்சான் இந்த-பூமி
ஓம்… ஓம்… ஓம் ஓம் ஓம்
செஞ்சுருட்டிக் குரலில்-ஏமி என்று-கொஞ்சி நம்ம-ஸ்வாமி 
அன்பக்-கொட்டி ஆட்சி-செஞ்சான் இந்த-பூமி

வாடுகின்ற மக்களிடம் தேடிச்சென்று கையில்வரும் 
நீறளித்துப் பார்த்துக்கொண்டான் பாசத்தோட  
(2)
அவன் சாமிதான் சாமிதான் ஐயம் இல்லே 
இதை நம்பினா நம்பினா சோகம் இல்லே
(SM)
 செஞ்சுருட்டிக் குரலில்-ஏமி என்று-கொஞ்சி நம்ம-ஸ்வாமி 
அன்பக்-கொட்டி ஆட்சி-செஞ்சான் இந்த-பூமி 
(MUSIC)
லோகத்திலே யாவருமே ஹரிங்க 
என்று புரிஞ்சு-நல்லா அன்பு-சேவை புரிங்க 
(2) 
அன்பு-சேவை ரெண்டு-கையில் கடவுள்-நாமம் உண்டு-வாயில் 
என்று-சொன்ன சாயி-வேதம் படிங்க 
இதைக் கொண்டிடுவோர்-தனக்குத் தீர்ந்து-போகும் பிணக்கு
கொறஞ்சு-போகும் அவங்க-பாவக் கணக்கு
நல்லா கொறஞ்சு-போகும் அவங்க-பாவக் கணக்கு
அவன் சாமிதான் சாமிதான் ஐயம் இல்லே 
இதை நம்பினா நம்பினா சோகம் இல்லே
(MUSIC)
பார்த்தாக்கா எளிதாத்தான் இருக்கு 
ஆனா சாத்திரம்-பதி..னெட்டும்-உள்ள இருக்கு
(2)
பூமியிலே அன்பென்று பேர்-கொண்டு தான்-வந்து 
மாத்தி வெச்சான் நெஞ்சுக்குள்ள புகுந்து
(2)
 இப்போ சாயிராமன் சிறப்பு பாரெங்கிலும் இருக்கு
நல்லாத்தான் ஆயிடுச்சு-மனசு ஒரு கல்லாத்தான் இருந்த நம்ம-மனசு 
அவன் சாமிதான் சாமிதான் ஐயம் இல்லே 
இதை நம்பினா நம்பினா சோகம் இல்லே




No comments:

Post a Comment