Saturday, May 30, 2020

433. அன்பூட்டி நம் சாயி ( மான் குட்டி இப்போது என் கையிலே) **

அன்பூட்டி நம்சாயி நம்நெஞ்சிலே மாற்றங்கள்-செய்தானடி (SM)

கைசுற்றிப் பொழிகின்ற திருநீறிலே துன்பம்-து..டைத்தானடி (SM)

அன்பூட்டி நம்சாயி நம்நெஞ்சிலே மாற்றங்கள்-செய்தானடி

தன் கைசுற்றிப் பொழிகின்ற திருநீறிலே துன்பம்-து..டைத்தானடி

நாள்தோறும் அன்பாகவே சாயி நல்-காட்சி தந்தானடி (2)

(MUSIC)

பங்காரு-என்றே அழைப்பானடி அதில்-தேனைக்-கு..ழைப்பானடி(2)

 சிங்காரத்தேர்போல-செல்வானடி அதில்-நெஞ்சத்தை வெல்வானடி(2)

தாயன்பின் பாலூட்டுவான் சாயி எந்நாளும் தாலாட்டுவான்

நாள்தோறும் அன்பாகவே சாயி நல்-காட்சி தந்தானடி

அன்பூட்டி நம்சாயி நம்நெஞ்சிலே மாற்றங்கள்-செய்தானடி

 (MUSIC)

அன்பே-தான் தன்ரூபம் என்றே-சொல்லி அதை நம்ரூபம் என்றானடி

நல்சேவை-என்கின்ற பாதை-தன்னில் அவன் நம்மை-இணைத்தானடி

வானத்தில்-இல்லை-கண்ணே நானுன் உள்ளத்தில்உள்ளேன்-என்றே  

நாள்தோறும் அன்பாகவே சாயி நல்-காட்சி தந்தானடி

அன்பூட்டி நம்சாயி நம்நெஞ்சிலே மாற்றங்கள்-செய்தானடி

 (MUSIC)

பலகோடி தாய்-கூடி வந்தாலுமே அன்பில் ஓர்சாயி போலாகுமா (2)

பொன்கோடி பொருள்-கோடி தந்தாலுமே அவன்-அன்புக்கு ஈடாகுமா(2)

அன்புக்கு உண்டோ எல்லை சாயி நெஞ்சுக்குள் பேதம் இல்லை

நாள்தோறும் அன்பாகவே சாயி நல்-காட்சி தந்தானடி

அன்பூட்டி நம்சாயி நம்நெஞ்சிலே மாற்றங்கள்-செய்தானடி

தன் கைசுற்றிப் பொழிகின்ற திருநீறிலே துன்பம்-து..டைத்தானடி

நாள்தோறும் அன்பாகவே சாயி நல்-காட்சி தந்தானடி

சாயி நல்-காட்சி தந்தானடி.. சாயி நல்-காட்சி தந்தானடி 

No comments:

Post a Comment