Saturday, May 30, 2020

432. நிச்சயம் தென்படுவான் (தெய்வத்தின் தேரெடுத்து) **




விருத்தம்
என் மனத்தில் ஏது அன்பு கல் மனத்தில் ஏது முன்பு
சாயிபிரான் புகுந்த உடன் ஊறியது ஆச்சர்யமே
(SM)
நிச்சயம் தென்படுவான் சாயி அன்போடு 
சேவையைச் செய்திடுவாய் நாமத்தினோடு
(2)
 (MUSIC)
ஆவிப் புகுந்திருக்கும் உடல்-வெறும் கூடு
ஆண்டவன் உனக்களித்த வாடகை வீடு 
(2)
என்றைக்கும் இருந்திடுமோ அதற்கு-உன் பேரும் (2)
இறந்ததும் கொள்ளுவதோ ஒரே ஒரு பேரு அதற்கேது பேறு
நிச்சயம் தென்படுவான் சாயி அன்போடு 
சேவையைச் செய்திடுவாய் நாமத்தினோடு 
(MUSIC)
நீர்-வற்றிப் போன-குளம் தனில்-மீன் ஏது 
உயிர்-வற்றிப் போன உடல் தனில்-திறன் ஏது  
ஆதலி..னால்-புரிவாய் சேவையை இன்று 
அது-உன்னைக் காக்கும்-இது சாயி-தந்த படிப்பு சாயி-தந்த படிப்பு
நிச்சயம் தென்படுவான் சாயி அன்போடு 
சேவையைச் செய்திடுவாய் நாமத்தினோடு 
(MUSIC)
புண்படும் நெஞ்சினுக்கு ஆறுதல் சொல்வாய்
கைகொண்டு சேவை தனை தினம்-தினம் செய்வாய் 
(2)   
சாதனையே  இதன்-மேல் சாத்திரம் இல்லை (2)
சாயிபி..ரான்-வாக்கில் அசத்தியம் இல்லை (2)
நிச்சயம் தென்படுவான் சாயி அன்போடு 
சேவையைச் செய்திடுவாய் நாமத்தினோடு 

 (Ends With Music)
 


No comments:

Post a Comment