Sunday, May 31, 2020

435. நோய்க்கு மருந்து-சாயி(நேத்து பறிச்ச ரோஜா) **


நோய்க்கு மருந்து-சாயி பசி-போக்கும் விருந்து-சாயி (3)

பாரில் இருந்தானே அன்பின் பேர்-கொண்டு

யாரவன்-போ..லே இருந்தா..ரோ-சொல்லு

பாரவன் போல்-நாளும் கண்டிடுமா சொல்லு

நோய்க்கு மருந்து-சாயி பசி-போக்கும் விருந்து-சாயி

நோய்க்கு மருந்து-சாயி

(MUSIC)

எந்தக் கடவுள் ஆனால் என்ன எல்லாம் ஒன்றென்றான்

எல்லா மதமும் ஒன்றே என்றான் எல்லாம் அன்பென்றான்

(1+SM+1)

ஆறுகள் நூறானாலும் கடலில் ஒன்றாய்ச் சேரும்

மதங்கள் வேறானாலும் அன்பைத் தானே கூறும் +(sm)

நோய்க்கு மருந்து-சாயி பசி-போக்கும் விருந்து-சாயி

நோய்க்கு மருந்து-சாயி

(MUSIC)

எத்தனைக்-கோலம் கொண்டால்-என்ன இறைவன் ஒருவன்தான்

மனிதப்பிறவி கொண்டால்-என்ன சாய்ராம் இறைவன்தான்

(1+SM+1)

நாவில் பேரைக்-கொண்டு (SM) கையில் சேவை-கொண்டு (SM)

நாவில் பேரைக்-கொண்டு கையில் சேவை-கொண்டு

பாரில்-வாழ்க என்று சொன்னான் சாயி நன்று

நோய்க்கு மருந்து-சாயி பசி-போக்கும் விருந்து-சாயி

நோய்க்கு மருந்து-சாயி

(MUSIC)

கொட்டும்-தேளும் சொட்டும்-தேனும் ஒன்றே எனக்கொண்டு

இருந்திட நமக்கும் சொல்லித் தந்தான் தானே-அதில் நின்று

(1+SM+1)

திங்கள் சூடும்-சிவனும் யமுனைக் கரை-மா..தவனும்

எல்லாம் சாயிபிரானே 

எங்கள் சாயிபிரானே..எங்கள் சாயிபிரானே..எங்கள் சாயிபிரானே 





No comments:

Post a Comment