விருத்தம்
சாயி ராமனே அன்பின் வடிவானவனே
அன்னை வடிவோனே பக்தர்களைக்
காப்பவனே
ஷீரடி பிரானே ஆண்டவனே சாயீசா
..சாயீசா
என் கீதம் கேளுமைய்யா இந்த
பிள்ளை குறை கேளுமைய்யா ..ஆ..
ஹோய்.. ஹோய்
(SM)
மனுசனாக வந்திருந்து நமக்கு-அன்பு
ஊட்டி-விட்ட சாயி-யாரு அந்த சாயி-யாரு
சாயி-யாரு அந்த சாயி-யாரு
+ (SM)
மானிடனின் வேஷத்திலே நடமாட-லோகத்திலே
மானிடனின் வேஷத்திலே நடமாட-லோகத்திலே
வாட்டம்-கொண்ட பேர்க்கு-எல்லாம்
உதவிசெஞ்சாரு-சாயி -உதவிசெஞ்சாரு
எந்தப் பாகுபாடும்-இல்லாம
அன்பைப்-பொழிஞ்சாரு-
மழையா அன்பைப்-பொழிஞ்சாரு
மழையா அன்பைப்-பொழிஞ்சாரு
மனுசனாக வந்திருந்து நமக்கு-அன்பு ஊட்டி விட்ட சாயி யாரு –அந்த சாயி யாரு
சாயி யாரு அந்த சாயி யாரு
அடடா..! தானாய் இறங்கி-வந்து
அனுதினமும் அருள்-சொரிந்து
அழகு-நடை போட்டு-வந்து
கைகளிலே நீறளித்து
தர்மம்-சொல்ல உலகத்திலே
.. ஒரு-தாயாய் தந்தையாய்
அன்பளித்த ஸ்வாமி உன்னை
யாருன்னு கேட்டிருக்கும்
இவங்க-அறியாமை பாருங்கப்பா
நீதான் வந்திவர்க்கு சொல்லணும்ப்பா
ஹோய்.. ஹோய்
நாமறிவோம் ஸ்வாமியினை இருள்-விளக்கும்
சூரியனை
உன்-அறிவைச் சோதிக்கவே
நாங்க-வந்தோமே
உனக்கு-என்ன தெரியும்-என்று
கேட்க வந்தோமே
ஓ..அப்படியா..விஷயம்
மண்ணில்-வந்த சூரியனோ என்பதுபோல் நடம்-புரிந்த -
ஸ்வாமி யாரு அந்த சாயி-யாரு
ஸ்வாமி யாரு அந்த சாயி-யாரு
(SM)
வானத்திலே-இருந்துகிட்டு
படுக்கையிலே தூங்கிக்கிட்டு இருப்பதில்லை என்றைக்குமே ஆண்டவனும்
தானாய் இறங்கி-வந்து அவதரிப்பான்-மானிடனாய்
சாயிபிரான் சாயிபிரான்
ஆண்டவனே ஆண்டவனே
மண்ணில்-வந்த சூரியனோ என்பதுபோல்
நடம்-புரிந்த -
தெய்வம் தானே சாயி தெய்வம்-தானே
தெய்வம்-தானே சாயி தெய்வம்-தானே
ஓம்..ஓம்..
அண்ணனுக்கும் புரியுதடி
சாயி-பேரும் தெரியுதடி
அண்ணனுக்கும் புரியுதடி
சாயி-பேரும் தெரியுதடி
வா.. எல்லோரும் சேர்ந்திடுவோம்
சாயி நாமம் பாடிடுவோம்
ஓம்..சாயிராம் ஓம்..சாயிராம்
ஜெய்சாய்ராம்..ஜெய்சாய்ராம்
சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்..
சாயிராம்
ஜெய்ஜெய்சாய்ராம்.. ஜெய்ஜெய்சாய்ராம்
சாயிராம் .. சாயிராம்
No comments:
Post a Comment