Sunday, May 31, 2020

493. ஆந்திர-க்ராமத்தில்(ராஜஸ்தானில் யாரோ ஒருவன்)



ஆந்திர-க்ராமத்தில் யாரோ-குழந்தை கண்ணன்-போல பிறந்திருக்காமே

வாங்..கண்ணே வாங்..கண்ணே நாம்-போய் பார்த்திடுவோம்

(2)     

அடநீ பாக்கலையா-நான் பார்த்துவிட்டேன் தம்பி

விரைவாய் சென்றிடுவாய்-நீ பார்த்திடு-போ தம்பி

அவனுமொரு தெய்வத்தின் அவதாரம்

மானிடனின் உடலில் இறையாகும்

யாரு-என்று பலருக்குத் தெரியாது

போ-தம்பி போ-தம்பி போய்-நீ பார்-தம்பி (2)

(MUSIC)

குபுக்-குபுக்-என லிங்கத்தை-உமிழ்ந்து அற்புதம் செய்வானாம்

கர-கரவெனத்-தன் கைகளைச்-சுழற்றி நீறினைப் பொழிவானாம்

நித்தமொரு அற்புதத்தை வேடிக்கையாய்ச் செய்பவனாம்

சத்தமின்றி செய்வதையே வாடிக்கையாய்க் கொண்டவனாம்

(SM)

சிவம்-சிவம் அவன் சிவ-வடிவம்-தான் என்பா..ரே-அண்ணே

பவம்-பவம்-என்ற மாயத்தைப்-போக்க அவர்-வந்..தா..ரா..மே

அன்பேரூபம் கொண்டேவந்தான் நமையும்அன்பே என்றேசொல்வான்

உலகம்-முழுதும் அன்பே-என்றான் அவன்-பேர் சாயிராம்

விரைவாய்

 போய்வருவாய் போய்- வருவாய் பார்த்திடுவாய்-தம்பி..அண்ணே

வாங்..கண்ணே வாங்..கண்ணே நாம்-போய் பார்த்திடுவோம் 

(MUSIC)

ஓம்ஓம்ஓம்-என அவனின்-மூச்சில் ப்ரணவம் கேட்குதாமே

ஆஹா-ஹா-வென வியந்திட-இசையும் முழங்கிடுச்சாமண்ணே

இன்னைக்கே-நீ சென்றிடுவாய் சென்று நீயும் பார்த்திடுவாய்

ஆந்திரத்தில் அந்தஇடம் எங்கே-என்று சொல்லிடுவேன்

(SM)

வருவாய்-நீயும் வந்திடுவாய்-உடன் கூட்டிச்செல்வாய் அண்ணே  

மறுபடி உனக்கும் பார்க்கணும்-போல தோணலையா அண்ணே

சரிடாதம்பி ஒன்றாய்-போவோம் அவனைக் கண்டால் பாபம் தீரும்

கடவுளைப் பார்க்க கணக்கா என்ன வந்திடுவேன் நானும்  

No comments:

Post a Comment