Sunday, May 17, 2020

275. கண்ணேசாயி தாலேலோ (நிலவே என்னிடம்)**

விருத்தம் 
இன்னமுதம் உண்டு 
கொஞ்சம் இதம் கொண்டு 
கண்வளர் தாலேலோ 
(2)
சாயி
இன்னமுதம் உண்டு 
கொஞ்சம் இதம் கொண்டு 
கண்வளர் தாலேலோ 

கண்ணே சாயி தாலேலோ செம் பொன்னே மணியே தாலேலோ(2)
முத்தே பர்த்தியின் ரத்தினமேநீ உறக்கம் கொள்வாய் தாலேலோ
கண்ணே சாயி தாலேலோ செம் பொன்னே மணியே தாலேலோ
(Music)
ஆடிய களைப்பால் இளைத்தாயே 
பொன்மேனிமைக் கரிபோல் கறுத்தாயே
(2)
ஓடிய உன்கால் களைத்தாயே நல்ஓய்வினை இனிமேல் எடுசாயீ
கண்ணே சாயி தாலேலோ செம் பொன்னே மணியே தாலேலோ
(Music)
பிள்ளையின் வடிவில் அன்னையடா (2)
நீ  அன்னையின் துயரை புரிந்துகொள்வாய்

பாட்டினில்  சொல்வேன் தாலேலோ 
நீ கண்வளராயோ சாயீசா 
கண்ணே சாயி தாலேலோ செம் பொன்னே மணியே தாலேலோ
 (Music)
ஓய்வு இல்லாதெந்..நேரமுமே (2)
அந்த ஆண்டவன் உனக்கேன் வேலை அய்யா 
நிம்மதியாய்நீ தூங்கிடுவாய் 
எந்த நேரமும்நீஏன் விழித்திருக்காய்  
கண்ணே சாயி தாலேலோ செம் பொன்னே மணியே தாலேலோ
முத்தே பர்த்தியின் ரத்தினமேநீ உறக்கம் கொள்வாய் தாலேலோ
கண்ணே சாயி தாலேலோ செம் பொன்னே மணியே தாலேலோ

No comments:

Post a Comment