Sunday, May 17, 2020

274. அம்மம்மா மண்ணில் (அம்மம்மா தம்பிஎன்று நம்பி) **



விருத்தம்
அன்பின் ரூபங்களே என்னும் வார்த்தையினால் நெஞ்சத்தை நன்றாக்கி வைத்தவராம் சத்தியத்தின் அன்புத்தந்தை. அவரை மறப்போமா உடலில் உயிர் உள்ளவரை.
(SM)
அம்மம்மா மண்ணில்வந்த சாயி நம் தந்தையல்லவா
நாள்தோறும் அன்பை தந்த அன்னையல்லவா (2)
அவன் நமக்காக மண்ணில்வந்த தெய்வம் அல்லவோ
அம்மம்மா மண்ணில்வந்த சாயி நம்தந்தையல்லவா
(MUSIC)
பனிபோல அன்பான மனம்வேண்டும் உனக்கு
அன்பின்றி பலகோடி செல்வங்கள் எதற்கு
(Short Music only after the first) + (2)
தெய்வத்தின் தொண்டென்று நம்பிக்கை கொண்டு
நீசேவை செய்தால் உன்பாபம்-பறக்கும்
இது நமக்காக அவன்தந்த பாடம் அல்லவோ
அம்மம்மா மண்ணில்வந்த சாயி நம்தந்தையல்லவா
(MUSIC)
தினம்ஓடி அறம்செய்து அவன்பாதம் நாடு
பதினாலு உலகாளும் அதற்கேது ஈடு
(Short Music only after the first) + (2)
நமக்கென்று அவன்தொண்டு புரிந்தானே அன்று
எந்நாளும் நம்பூஜை சேவைஅல்லாவா 
இது அன்பாலே நம்சாயி சொன்னதல்லவா 
அம்மம்மா மண்ணில்வந்த சாயி நம்தந்தையல்லவா
நாள்தோறும் அன்பை தந்த அன்னையல்லவா 
(Short Music)
அம்மம்மா மண்ணில்வந்த சாயி நம்தந்தையல்லவா






No comments:

Post a Comment