Tuesday, August 20, 2024

655.மலரினைப் போலே(மலர்களிலே பல நிறம் கண்டேன்)**

மலரினைப் போலே மனம் கொள்வோம் அதில் சாயிபிரானை வரச் செய்வோம் 
உதட்டினிலே அவர் பேர் கொள்வோம் அவர் சொல்லிய சேவை கரம் கொள்வோம் 

(MUSIC)

சமிதி எனும் ஒரு திருக்கோவில் அதில் தினம் சாயி லீலைகளே (2)
சென்று மனம் அதன் இனிமையிலே இதம் பெற்றிட ஏங்கும் சடுதியிலே (2) 
மலரினைப் போலே மனம் கொள்வோம் அதில் சாயிபிரானை வரச் செய்வோம்
(MUSIC)

சமிதியில் கேட்டிடும் திருப்பாட்டு சேவை நடந்திடும் அன்போடு (2)
ஆங்கருள் தந்திடுவார் பாரு சத்ய சாயிரானும் அதைப்பார்த்து (2)
மலரினைப் போலே மனம் கொள்வோம் அதில் சாயிபிரானை வரச் செய்வோம் 
உதட்டினிலே அவர் பேர் கொள்வோம் அவர் சொல்லிய சேவை கரம் கொள்வோம் 
மலரினைப் போலே மனம் கொள்வோம் அதில் சாயிபிரானை வரச் செய்வோம்

No comments:

Post a Comment