Sunday, May 31, 2020

469. சொல்லுவாய் மனமே(சென்று-வா மகனே சென்று-வா)



சொல்லுவாய் மனமே சொல்லுவாய்

உருகிச் சொல்லுவாய் மனமே சொல்லுவாய்

சாயி சாயி எனும் நாமத்தினை (2)

உயிர் தங்க விடும் இறுதி மூச்சு வரை

சொல்லுவாய் மனமே சொல்லுவாய்

உருகிச் சொல்லுவாய் மனமே சொல்லுவாய்

(MUSIC)

அறிந்தது கை..யளவு உணர்ந்து விடு

உன்னை அறிகின்ற வரை-விண்ணைப் பறந்து-தொடு

அவன் அருள் வாசல் திறக்கும் வரை (2)

சாயி நாமத்தை உதவியாய்க் கொண்டுஇரு 

சொல்லுவாய் மனமே சொல்லுவாய்

உருகிச் சொல்லுவாய் மனமே சொல்லுவாய்

(MUSIC)

உண்மையைச் சொல்வதற்கே அவதரித்து

வந்தான் உலகத்திலே-சாயி நடிப்பதற்கு

கல் போன்ற உள்ளத்திலே புகுந்து சென்று

நல்ல அன்பென்ற சாயி விதை முளைப்பதற்கு

 சொல்லுவாய் மனமே சொல்லுவாய்

உருகிச் சொல்லுவாய் மனமே சொல்லுவாய்

(MUSIC)

உனக்குள் ஒளியாக அது-இருக்கும்

நல்ல இருட்டில்-தானாக வழி-கொடுக்கும்

காரணத்தின் தேகம் கடத்தல் தொல்லை

உந்தன் காரணத்தின் தேகம் கடத்தல் தொல்லை

அந்த சமயத்தில் உனக்கு நாமம் துணை

சொல்லுவாய் மனமே சொல்லுவாய்

உருகிச் சொல்லுவாய் மனமே சொல்லுவாய்




No comments:

Post a Comment