Thursday, July 27, 2023

637.அம்மாவும் அப்பாவும்(அம்மாவென்றழைக்காத)**


அம்மாவும் அப்பாவும் நீ சாயிராம் வழிகாட்டும் குருநாதன் நீ சாயிராம் (2)
பாரில் வந்து பாசம் பெய்யும் அன்பு அவதாரம்  நீ தானே சாயீ 
அம்மாவும் அப்பாவும் நீ சாயிராம் வழிகாட்டும் குருநாதன் நீ சாயிராம்
(MUSIC)
உளதாகி இலதாகி சிலதாகிப் பலதாகி உறைகின்ற  இறையோனை மறை கூறலாம் 
கண்ணுக்குத் தோன்றாமல் புரியாத புதிர்போல இருக்கின்ற ஒன்றென்று பலர் கூறலாம்
அவை யாவும் அறிகின்ற திறனில்லை சாயி என குறை நீங்க அழுகின்ற என் போலவே
பலரிங்கு இருப்பாரோ அறியேனே  அன்னாரின் குறை நீக்க/தீர்க்க வந்தாயோ என் ஸ்வாமியே 
அதை யாரே அறிவாரே ..!
அம்மாவும் அப்பாவும் நீ சாயிராம் வழிகாட்டும் குருநாதன் நீ சாயிராம்
(MUSIC)

பசும்புல்லின் இதம் தன்னை சிரிப்பாலே நீ தந்து மனம் கொண்ட அமைதிக்கு ஈடேதய்யா
விசும்பும் நல் உள்ளத்தின் துயர் போக பங்காரு எனச் சொல்லி அணைத்தாயே என் சாயிராம்
வினைதந்த நான்-என்ற குறையோடு பண்பாடும் எனைக் கூட எதிர்வந்து தடுத்தாயய்யா 
தினை-போன்று இருந்தாலும் பனைபோல நிறை கொண்டு என்-பாட்டை அருள்தந்து ஏற்றாய் ஐயா
அதை யாரே அறிவாரே..!
அம்மாவும் அப்பாவும் நீ சாயிராம் வழிகாட்டும் குருநாதன் நீ சாயிராம்
பாரில் வந்து பாசம் பெய்யும் அன்பு அவதாரம்  நீ தானே சாயீ 
அம்மாவும் அப்பாவும் நீ சாயிராம் வழிகாட்டும் குருநாதன் நீ சாயிராம் (2)



Other SONGS Recorded

முதல் பக்கம்  

No comments:

Post a Comment