Thursday, July 27, 2023

638.உன் நாமம்(அம்மாவென்றழைக்காத)**

உன் நாமம் ஒலிக்காத பண் இல்லையே என் பாட்டில் அதையன்றி வேறில்லையே (2)
எங்கும் ஒன்று என்னல் போலே எந்தன் பாடல்களில்-வேறு ஏது
உன் நாமம் ஒலிக்காத பண் இல்லையே என் பாட்டில் அதையன்றி வேறில்லையே
(music)

நினைவெங்கும் என்சாயி எழுத்தாகி சொல்லாகி பண்ணாகும் இசைமாரி நீ தானய்யா
என்றைக்கும் என்பாடல் உருவாகும் முன்தோன்றும் உன் ப்ரேமை முகம் காட்டும் பா தானய்யா
பொருளோடுன் புகழ்தோன்ற நான்செய்யும் திருப்பாட்டில் குறைதோன்ற பொறுத்தாறு என்ஸ்வாமியே
தொடுத்திங்கு நான்சாற்றும் திருப்பாவில் நிறைகொண்டு குறைதள்ளு தடுத்தாளு என் ஸ்வாமியே
என் சாயி...என் ஸ்வாமி...
உன் நாமம் ஒலிக்காத பண் இல்லையே என் பாட்டில் அதையன்றி வேறில்லையே
(music)

தினம் யோகம் புரிகின்ற சாதுக்கள் பணிந்தேத்தும் பண்போல நான் பாட திறன் ஏதய்யா
குழல்போல யாழ்போல அழகொன்று இழையோட இசைபாடும் குரலொன்று எனக்கேதய்யா
என்றைக்கு அலை ஓய என்றைக்கு நான்-குளிக்க என்றே தான் என் பாக்கள் படித்தேனய்யா
கிடையாது இசை ஞானம் என்றாலும் உனனப்பாடும் புரியாத அருள்தாகம் கொண்டேனய்யா
என் சாயி.. பொறுப்பாயே...
உன் நாமம் ஒலிக்காத பண் இல்லையே என் பாட்டில் அதையன்றி வேறில்லையே
எங்கும் ஒன்று என்னல் போலே எந்தன் பாடல்க..ளில்-வேறு ஏது
உன் நாமம் ஒலிக்காத பண் இல்லையே என் பாட்டில் அதையன்றி வேறில்லையே (2)

Other SONGS Recorded

முதல் பக்கம்  

No comments:

Post a Comment