மனித வடிவிலே ..
தெய்வம் வந்தது
மனித வடிவிலே தெய்வம் வந்தது
வாரிப் பாரில் வழங்க அன்புத் தந்தையானது
சேயின் வெள்ளை உள்ளம் கொண்ட தாயுமானது
பெருகி ஓடும் ஆறைப் போல ப்ரேமை தந்தது
மனித வடிவினில் தெய்வம் வந்தது சாயி தானது
(இசை)
ஊறுகின்ற ஏழை கண்ணை துடைக்கும் தாயது
உருகும் நல்ல உள்ளம் தனில் உலவும் தானது
(2)
பாருக்கென்று பிறந்து வந்த தெய்வம் தானது
மனம் தனில் அது நின்று காத்தது
மனித வடிவிலே தெய்வம் வந்தது
வாரிப் பாரில் வழங்க அன்புத் தந்தையானது
சேயின் வெள்ளை உள்ளம் கொண்ட தாயுமானது
பெருகி ஓடும் ஆறைப் போல ப்ரேமை தந்தது
மனித வடிவினில் தெய்வம் வந்தது சாயி தானது
(இசை)
சிவபெருமான் உலகை நாடிக் கொண்ட பேரெது
உமையவளாய் தாய் வடிவம் கொண்ட பேரெது
(2)
உரைத்திட நா இனிக்கும் சாயி என்னும் பேரது
அது அது நாம் பெற்ற பேறது
மனித வடிவிலே தெய்வம் வந்தது
வாரிப் பாரில் வழங்க அன்புத் தந்தையானது
சேயின் வெள்ளை உள்ளம் கொண்ட தாயுமானது
பெருகி ஓடும் ஆறைப் போல ப்ரேமை தந்தது
மனித வடிவிலே தெய்வம் வந்தது சாயி தானது...
சாயி தானது...
No comments:
Post a Comment