ஏங்காத நெஞ்சும் உண்டோ
(SM)
நம்-சாயீசனை அழகு-ப்ரேமேசனைக் காண
ஏங்காத நெஞ்சும் உண்டோ
(2)
(MUSIC)
நான்-என்னும் அஹங்காரம் வரும்-வேளையில்
கோரத் தீயாக பவமாயம் சுடும்-வேளையில்
(2)
ஏங்காத நெஞ்சும் உண்டோ
நம் சாயீசனை அழகு ப்ரேமேசனைக் காண
ஏங்காத நெஞ்சும் உண்டோ
(MUSIC)
ஓடாதோ வினை-சாயி விழிப் பார்வையில்
அருள்-காக்காதோ உலகென்ற குழிப் பாதையில்
(2)
ஈடேதும் இல்லாத உயர் சேவையை
நம்..மிடம்-வந்து தான்-செய்த நம்-ஸ்வாமிக்கே
(2)
ஏங்காத நெஞ்சும் உண்டோ
(MUSIC)
இதோ-இந்தா எனவேநீறையளிக்கும் அவன்-சுழலும்கரத்தைத் தான்காணவே
பசும்-தங்கம் என-விளங்கும் பாதம் உலவும்-எழில் நாளும் அதைக்காணவே
தொல்லை போக்கும் நாமம் தனை செவி கேட்கவே
அன்பே என்றே நாளும் சாயி குரல் கேட்கவே
நம்மை நாடி வந்து தோடிக் குரலில் நன்கே
சிந்தை குளிர தங்கம் என்றழைத்தே
அன்பைச் சுரந்து உள்ளம் கனிந்து
தந்தேன்அருள்-தந்தேன் என-உயர் கரத்துடன்
சாயீசன் நமைக் காண வரவேண்டியே
செவிதிகட்டாத அவன்ப்ரேம மொழி-கேட்கவே
ஏங்காத நெஞ்சும் உண்டோ
நம் சாயீசனை அழகு ப்ரேமேசனைக் காண
ஏங்காத நெஞ்சும் உண்டோ
No comments:
Post a Comment