Saturday, May 30, 2020

394. ஓயாத கீதம் எழும் (ஆடாத மனமும் உண்டோ) **



ஓயாத கீதம் எழும் 
(SM)
 சாயி கீதம்-பெரும் சோக-கீதம் தனைப்போன்று 
ஓயாத கீதம்-எழும் 
(2)
(MUSIC)
தினம்-பாடும் என்சாயி இசை கீதமாய்
சாயி வரவேண்டும் என்கின்ற பிடிவாதமாய்   
(2)
ஓயாத கீதம் எழும் 
சாயி கீதம்-பெரும் சோக-கீதம் தனைப்போன்று 
ஓயாத கீதம் எழும் 
(MUSIC)
 நாள்தோறும் மலர்ப்பாதம் தரும்-காட்சியை 
கை வழிந்தோடும் திருநீறின் அருள்-மாட்சியை 
(2)
ஈடேதும் இல்லாத அவன்-ப்ரேமையை 
நம்..மிடம்-தந்து நடமாடி வரவேண்டியே
(2)
ஓயாத கீதம் எழும்
(MUSIC)
நமைக்கொஞ்சும் கனியமுதைமிஞ்சும் அவனின்மொழிநாளும் நாம்கேட்கவே 
தினம்-அன்னம் எனவே-எழில்-கொஞ்சும் தரிசனத்தை-நாளும் நாம்-காணவே
மல்லிப்பூவும் நாணும்-அவன் பதம்-காணவே 
நீறைத்தந்தே வாடும் மக்கள் வினைபோக்கவே
நம்மை நாடி வந்து பொங்கும் அன்பு தந்தே 
சித்தம் தன்னில் ஞானச் சுடரைத் தந்தே
நம்மை அணைத்து உள்ளம் கனிந்து 
அன்பே நீ அன்பே எனும் மொழியுடன் 
சாயீசன் நமைக் காண வரவேண்டியே 
கண் திகட்டாத அவன்பாச முகம் காணவே
ஓயாத கீதம் எழும் 
சாயி கீதம்-பெரும் சோக-கீதம் தனைப்போன்று 
ஓயாத கீதம் எழும்
 


No comments:

Post a Comment