Saturday, May 30, 2020

396. சாயீசன் திரு நாமமே((ஆடாத மனமும் உண்டோ) **



சாயீசன் திரு நாமமே
 (SM)
பெரும் துணையாகுமே என்றும் நமைக்-காக்குமே 
சத்ய சாயீசன் திரு நாமமே
(MUSIC)
சபைதன்னில் பாஞ்சாலி அழும் வேளையில் 
மானம் பிழைத்தாளே அழைத்தாளே அவள் கூவியே 
சாயீசன் திரு நாமமே
பெரும் துணையாகுமே என்றும் நமைக்-காக்குமே 
சத்ய சாயீசன் திரு நாமமே
 MUSIC
நாவலே தினம் நாமம் நாம் கூறவே 
செவி கேட்காதோ பிரணவத்தின் ஓம் ஓசையை 
ஈடேறும் உன்-த்யானம் எனும்-முயற்சியும் 
தன்..னிடம்நின்ற ஆன்மத்தின் ஒளி தோன்றவே  
சாயீசன் திரு நாமமே
 (MUSIC)
தினம்-அஞ்சும் எமபயத்தை-மிஞ்சும் திறன்-வழங்கும்நாமம் நாம்சொல்லவே
பசும்தங்கம் எனவிளங்கித்தோன்றும் உனக்குத்தேஜஸ் ஒளிரும் பேர் கூறவே
நாளும் நாமம் கூறும்  மனம் பூவாகுமே
கண்ணின் முன்னே ஆடும் தெய்வச் சுடர் நாளுமே
அன்பின் சேவை தன்னை உந்தன் கரத்தில் கொண்டே 
சாயி நாதன்-பேரை உந்தன் உதட்டில் கொண்டே
நன்மை புரிந்து உள்ளம் கனிந்து
ஓம்ஓம் ஹர ஓம்ஓம்  எனும் மொழியுடன் 
சாயீசன் திருநாம் தனைச் சொல்வதே 
மா பெரும்-யாகம் அது-யோகம் என்றாகுமே 
சாயீசன் திரு நாமமே
பெரும் துணையாகுமே என்றும் நமைக்-காக்குமே 
சத்ய சாயீசன் திரு நாமமே








No comments:

Post a Comment