Saturday, May 30, 2020

387. சத்தியம்-நீயே தருமம்-நீயே(சத்தியம்-நீயே தருமத் தாயே) **



சத்தியம்-நீயே தருமம்-நீயே மனிதவடிவில் தெய்வமும் நீயே (2)
(MUSIC)
அருளெனும் திருநீறு தரும் சாயி உன்னை  
மனத்தில் நினைத்தாலே வினை-போகும் அன்றே 
(2) 
பாரினிலே உனக்கீடேது சொல்வேன் 
கடவுள் வந்தான் என் திருநாட்டுக்குள்ளே 
வேதமன்றோ உன் திருவாக்கு ஒன்றே..
சாய்ராம்(4) ..ஓம்
சத்தியம்-நீயே தருமம்-நீயே மனிதவடிவில் தெய்வமும் நீயே
(MUSIC)
நெஞ்சினைப் பார் அன்பென்னும் ஆறு    
பாசத்திலே அது தாயாகும் நூறு 
(2)
ஸ்வாமி என்றோர் முறை அழைத்தாலும் போதும்.. ஓ..ஓ..
ஸ்வாமி என்றோர் முறை அழைத்தாலும் போதும்
ஏமி என்றோர் குரல் உன்-பாசம் தூவும் (2)
சத்தியம்-நீயே தருமம்-நீயே மனிதவடிவில் தெய்வமும் நீயே
(MUSIC)
உன்னையே நாங்கள் மறந்து விட்டாலும் 
உன்னரும் பெருமையை மறுத்து  விட்டாலும்
(2)
குழந்தை எங்களையே  மறக்காத தாயே (2)
ஜாதி மதம்-கடந்து மண்ணாளும் தெய்வம் 
சாய்ராம்(4) ..ஓம்
சத்தியம்-நீயே தருமம்-நீயே மனிதவடிவில் தெய்வமும் நீயே
(MUSIC)
தன்னையே கொடுத்தனை அன்பின் பேரோடு 
சம்சார கடலிலே  நீ பற்றுக் கோடு
(2)  
பொன்னிலே செய்தது உன்பாச மனது (2) 
பூப்போலுன் நெஞ்சது காக்குது உலகு (2)
சத்தியம்-நீயே தருமம்-நீயே மனிதவடிவில் தெய்வமும்-நீயே
மனிதவடிவில் தெய்வமும்-நீயே.. சாய்ராம்(4) ..ஓம்
 



No comments:

Post a Comment