Saturday, May 30, 2020

388. சாயிக்கு மேலே ஒரு சாமி (காசிக்குப் போகும் சந்யாசி) **


சாயிக்குமேலே-ஒருசாமிநீ கண்டதுண்டோ-சொல் அண்ணே-நீ(2)

சந்திரசூரியன் அவன்கண்ணே

சந்திரசூரியன் அவன்கண்ணே இங்கு சுத்துது-பூமி அவனாலே

சாயிக்குமேலே ஒருசாமி-நீ கண்டதுண்டோ-சொல் அண்ணே-நீ

நடக்குது-யாவும் தன்னாலே

 

நடக்குது-யாவும் தன்னாலே

அதை சாமி செஞ்சான்னு எண்ணாதே

(2)

உடன் திறக்குது-வாயும் ...தம்பீ...அட..தம்பீ... தம்பி

திறக்குது-வாயும் தன்னாலே உணவு கையில்நீ-எடுத்த பின்னாலே (2)

சாமிண்ணு சாமிண்ணு சாமிண்ணு ஒண்ணு இல்ல தம்பி

நீ ஏமாறாதே அவன நம்பி

(MUSIC)

ஆதரவாக வருபவன் சாயி

அன்பினைத் தாய்போல் தருபவன் சாயி

(2)

படைத்துப் பின்னிருப்பான் அவனே சாட்சி

தானாய்ப் பிறந்தா வந்தாய்நீ யோசி

 

நொந்து அழுகிறார் பலர் நூலாகி

இப்போ தம்பீ எங்க உன் சாயி

(2)

சாமியின் மந்திரம் மூளையைக் கெடுக்கும்

தான்-எனும் உன்திறம் வாழ்க்கையைக் கொடுக்கும் (2)

சாமிண்ணு சாமிண்ணு சாமிண்ணு ஒண்ணு இல்ல தம்பி

நீ ஏமாறாதே அவன நம்பி

(MUSIC)

என்-திறம் என்பது உன்-திமிர் ஆகும்

இளமை வரையில்-தான் உன்னுடன் இருக்கும்

(2)

யமன் வரும்போது பவபயம் தாக்கும்

ஸ்வாமின் பேர்-தான் அன்றுனைக் காக்கும்

(2)

சத்தியம் சொன்னாய் பொன் போலே

புத்தியும் வந்தது உன்னாலே  

தீர்த்தாய் சந்தேகம்

(2)

சத்தியம் சொன்னது நானல்ல

சாமியும் சாயியும் வேல்ல

அவன்-சொல்லே வேதம்

(2)

சாயி தான்-இனி நம்-தெய்வம்

சத்தியம் இனி-நம் துணை-யாகும்

(2)

சாயியும் ப்ரேமையும் வேறில்லை

சாயிராமன்தான் அன்பின் எல்லை

(2)

சாய்ராம் என-இனி-தினம் அவன்-பெயர் சொல்வோம்

அதைத் துணை-எனக் கொள்வோம் இனி-நாம்

சாய்ராம் எனவே

இனிமேல் துயரே இலையே

அனுதினம் அவன் பெயர் சொல்வோம்

பவபயம் சென்றிட வெல்வோம்

சாய்ராம் சாய்ராம் என நாமே

சாயிக்குமேலே-ஒருசாமி பார் கண்டதில்லை இல்லை என்போமே  சாயிராம் ராம் எனச் சொல்வோமே

அந்த பவ வினை நோயினை வெல்வோமே 




No comments:

Post a Comment