சாயிராம் எனும் திருப் பெயராலே
எதையும் தாங்கலாம் கலங்காதே
முன்னோர்கள் உரைத்ததும் இதுதானே
நிறையும் ப்ரணவ ஓம் இதுதானே
எங்கும் நிறையும் ப்ரணவ ஓம் இதுதானே
(MUSIC)
உன்னாலே முடிந்தது பேர் கூறு
தன்னாலே நடந்திடும் நீ பாரு
உலகினில் அன்பெனும் பேரோடு
வந்திடுவான் திரு நீறோடு
(SM)
வந்திடுவான் திரு நீறோடு
ஓம் சாயிராம் எனும் திருப் பெயராலே
எதையும் தாங்கலாம் கலங்காதே
முன்னோர்கள் உரைத்ததும் இதுதானே
நிறையும் ப்ரணவ ஓம் இதுதானே
எங்கும் நிறையும் ப்ரணவ ஓம் இதுதானே
(MUSIC)
காலத்தைக் கடந்திடும் அவன் ஆதி
உலகவன் பாதியில் சரிபாதி
விண்ணென இருப்பது தான் மீதி
உலகங்கள் நிறைந்திடும் அவன் ஜோதி
(1+SM+1)
ஓம் சாயிராம் எனும் திருப் பெயராலே
எதையும் தாங்கலாம் கலங்காதே
முன்னோர்கள் உரைத்ததும் இதுதானே
நிறையும் ப்ரணவ ஓம் இதுதானே
எங்கும் நிறையும் ப்ரணவ ஓம் இதுதானே
(MUSIC)
அனுதினம் அவன் பெயர் சொல்லிவிடு
மானிட சேவையை கரத்திலெடு
திறந்திடும் சொர்க்கத்தின் மேல் வீடு
இரண்டற அவனில் கலந்து விடு
(1+SM+1)
ஓம் சாயிராம் எனும் திருப் பெயராலே
எதையும் தாங்கலாம் கலங்காதே
முன்னோர்கள் உரைத்ததும் இதுதானே
நிறையும் ப்ரணவ ஓம் இதுதானே
எங்கும் நிறையும் ப்ரணவ ஓம் இதுதானே
(MUSIC)
சாயிராம்..சாயிராம்..சாயிராம்..சாயிராம்..
No comments:
Post a Comment